இயேசு மத நிராகரணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயேசு மத நிராகரணம் என்பது சிவப்பிரகாசர் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மத கருத்துக்களை எதிர்த்து செய்யுள் வடிவில் எழுதப்பட்ட நூலாகும்.
சதுரகராதி எழுதிய வீரமாமுனிவர் காலத்திய இந்நூல் கிறித்தவத்தை முற்றிலுமாக நிராகரிக்கும் விதமாகவும் அதன் கருத்துக்களை எதிர்க்கும் விதமாகவும் படைக்கப்பட்டுள்ளது.[1] இந்நூலை ஏசு மத நிராகரணம் எனவும் எழுதுகின்றனர்.
எழுதியவர்
சிவப்பிரகாசர்,[2] "கற்பனைக் களஞ்சியம்" என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம சிவப்பிரகாசர்" என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவ வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்மந்தர்,சுந்தரர், அப்பர்,மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். இவர் முப்பத்து நான்கிற்கும் மேற்பட்ட சைவ சமயச் சார்புள்ள நூல்களை இயற்றியுள்ளார்.[3]
Remove ads
விளக்கம்
சிவப்பிரகாசர் எடுத்துக்காட்டுக்களுடன் கிறித்தவத்துக்கு எதிரான கருத்துக்களுடன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாற்றின் படி இராபர்ட் தெ நோபிலி உடன் இந்துத்துவம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வேறுபாடுகளைப்பற்றி சமயவாதம் புரிந்ததாக கூறுவார். ஆனால் வேறுசிலரோ கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்று அழைக்கப்படும் வீரமாமுனிவர் உடன்தான் வாதம் புரிந்தார் என்று கூறுவர். தற்போது இப்புத்தகத்தின் எந்த பிரதியும் எங்குமே இருப்பதாக அறியப்படவில்லை. சில எழுத்தாளர்கள் அந்நூல் சிலரால் முற்றிலுமாக எரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
சிவப்பிரகாசரின் சகோதரர் வேலையர் அவர்களின் வழிவந்த ஆசிரியராகப் பணியாற்றி பின்பு பெஞ்ச் மாஜிஸ்ரேட் ஆக சமூக பணியாற்றிய எஸ். வி. எஸ் இரத்தினம் தனது தன்வரலாற்று நூலான "நான் உங்கள் தோனி" என்ற நூலில் இயேசு மத நிராகரணம் குறித்து எழுதியுள்ளார்.[4] அந்த புத்தகத்தில் தனது தாத்தாவும், சுந்தரேசனார்ன் மகனுமான சூசை என்கிற சாமிநாத தேசிகர்இடம் "இயேசு மத நிராகரணம்" நூலின் பிரதி பனையோலையில் இருந்ததாகவும் பின்னர் சிலகாலத்தில் காணமற்போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Remove ads
காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads