ஏமானந்தா பிசுவால்
ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏமானந்தா பிசுவால் (அ) ஹேமானந்தா பிஸ்வால் (Hemananda Biswal) (1 டிசம்பர் 1939 - 25 பிப்ரவரி 2022) ஒரு இந்திய அரசியல்வாதி. பிஸ்வால் ஒடிசாவின் முதலமைச்சராக 7 டிசம்பர் 1989 முதல் 5 மார்ச் 1990 வரையிலும், மீண்டும் 6 டிசம்பர் 1999 முதல் மார்ச் 5, 2000 வரையிலும் பணியாற்றினார்.
2009 முதல் 2014 வரை சுந்தர்கார் தொகுதியின நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். ஒடிசாவின் முதல் பழங்குடியின முதல்வர் பிஸ்வால் ஆவார்.[1]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி
பிஸ்வால் ஒடிசாவின் தாகூர்பாடா கிராமத்தில் 1939 ஆம் ஆண்டு திசம்பர் 1 ஆம் நாள் பாசுதேவ் மற்றும் திரிமானி பிஸ்வால் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் சுந்தர்காரில் உள்ள அரசுக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார், மேலும் தொழில் ரீதியாக ஒரு விவசாயி ஆவார்.[2]
அரசியல் வாழ்க்கை
1974 ஆம் ஆண்டில், இவர் ஒடிசா சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1977 வரை பணியாற்றினார். பின்னர், 1980 ஆம் ஆண்டில், இவர் மீண்டும் ஜார்சுகுடாவில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். இவர் ஒடிசாவின் முதலமைச்சராக முதல் முறையாக 7 டிசம்பர் 1989 முதல் 5 மார்ச் 1990 வரையிலும், இரண்டாவது முறையாக 6 டிசம்பர் 1999 முதல் 5 மார்ச் 2000 வரையிலும் இருந்தார். 2009 முதல் 2014 வரை சுந்தர்கார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[3]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு
பிஸ்வால் ஊர்மிளா பிஸ்வாலை மணந்தார். இத்தம்பதியினருக்கு ஐந்து மகள்கள் இருந்தனர். இவர் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 25 பிப்ரவரி 2022 அன்று தனது 82 ஆம் வயதில் இறந்தார். இவர் இறப்பதற்கு முன் நிமோனியாவால் அவதிப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads