ஏர்னெஸ்ட் மக்கின்டயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏர்னெஸ்ட் தளையசிங்கம் மாக்கின்டயர் (Ernest Thalayasingam MacIntyre,[2] பிறப்பு: 26 செப்டம்பர் 1934) இலங்கையைச் சேர்ந்த ஆங்கில நாடகாசிரியர் ஆவார். இவர் இலங்கை ஆங்கில நாடக மேடைகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பரவலாக அறியப்பட்டவர்.[3]
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
எர்னெஸ்ட் மக்கின்டயர் கொழும்பு நகரில்[4] 1934 செப்டம்பர் 26 இல் பிறந்தார்.[5] யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் தங்கியிருந்து கல்வி கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 1960களில் மெக்கின்டயர் இலங்கையில் மிக வெற்றிகரமான ஆங்கில நாடகாசிரியராகப் பாராட்டப்பட்டார். 'Stage and Set' என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்து பல பன்னாட்டு நாடகங்களையும் மற்றும் தான் எழுதிய நாடகங்களையும் மேடையேற்றினார்.[5][6]
1961 முதல் 1967 வரை இலங்கை வான்படையில் பணியாற்றினார். பின்னர் 1969-69 காலப்பகுதியில் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியின் நாடகப் பள்ளியில் பணிப்பாளராகப் பணியாறினார். 1969 முதல் 1973 வரை யுனெஸ்கோ திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.[1][5]
1974 ஆம் ஆண்டில் இவர் ஆத்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த போதிலும், இலங்கை சென்று பல நாடகக் கலைஞர்களைப் பயிற்றுவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், எஃப். சி. லுடோவிக்கின் He Comes from Jaffna என்ற நாடகத்தை சிட்னியில் மேடையேற்றினார்.[3] 2011-13 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[4]
2009 இல் "Antigone in Sri Lanka as IRANGANI" என்ற நாடகத்தை எழுதினார்.[7] 2009 ஆம் ஆண்டில் இந்நாடகம் சிட்னியிலும், 2010 ஆம் ஆண்டில் கான்பராவிலும் மேடையேறியது.[8] 2011 ஆம் ஆண்டில் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.
Remove ads
படைப்புகள்
- The Full Circle of Caucasian Chalk, 1967[5]
- The President of the Old Boys' Club[5]
- He Still Comes From Jaffna[3]
- Let's Give Them Curry, 1981[9]
- The Education of Miss Asia, 1971[1][10]
- Rasanayagam's Last Riot, 1990[3]
- The Loneliness of the Short-Distance Runner, 1991: புதுதில்லி[11]
- A Somewhat Mad and Grotesque Comedy, 1991: புதுதில்லி[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads