ஏர் பிரான்சு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏர் பிரான்சு (Air France), பாரிசின் வடபகுதியிலுள்ள டரெம்ப்லே-என்-பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை நிறுவனம் ஆகும். ஏர் பிரான்சு-கேஎல்எம் குழுமத்தின் துணை நிறுவனமாகவும், சிகாய் டீம் எனும் உலகளாவிய விமானச் சேவை கூட்டணியின் நிறுவன உறுப்பினராகவும் ஏர் பிரான்சு உள்ளது. 2013 ஆம் ஆண்டின்படி, ஏர் பிரான்சு நிறுவனம் பிரான்சு நாட்டில் 36 இலக்குகளுக்கும், 93 நாடுகளில் உள்ள 168 இலக்குகளுக்கும் (வெளிநாட்டு துறைகள் மற்றும் பிரான்சின் பிரதேசங்கள்) தங்களது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. ஏர் பிரான்சு நிறுவனம், 2011 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 59,513,000 பயணிகளுக்கு பயணச்சேவை புரிந்துள்ளது.

அக்டோபர் 7, 1933 இல் ஏர் ஓரியன்ட், ஏர் யூனியன், காம்பாக்னி செனெரல் ஏரோபோசுடல், காம்பாக்னி இண்டர்நேசனல் டி நேவிகேசன் ஏரியன் மற்றும் சொசையட்டி செனரல் டி திரான்சுபோடு ஏரியன் ஆகியவற்றின் இணைப்பு நிறுவனமாக ஏர் பிரான்சு உருவானது.

1950 முதல் 1990 வரை பனிப்போரில் மூன்று முக்கிய கூட்டணி விமானச்சேவைகள் மட்டுமே மேற்கு பெரிலினில் இருந்து தெம்பெல்லோல்பு மற்றும் டிகெல் விமான நிலையங்களுக்கு செயல்பட்டன. அந்த மூன்று விமானச் சேவைகளில் ஏர் பிரான்சு நிறுவன விமானங்களும் ஒன்று.

Remove ads

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

சிட்டிஜெட் மற்றும் எஃச்ஓபி ஆகிய துணை நிறுவனங்களுடனும் ஸ்கை டீமுடன் கூட்டணி பங்கீட்டினையும் பெற்றுள்ள ஏர் [பிரான்ஸ் நிறுவனம், சுமார் 24 நிறுவனங்களுக்கு மேலாக கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:[1]

  1. ஏர் ஆஸ்ட்ரல்
  2. ஏர் கொர்சிகா
  3. ஏர் மொரிஷியஸ்
  4. ஏர் செய்செல்லெஸ்
  5. ஏர் செர்பியா
  6. ஏர் டாஹிடி நுய்
  7. ஏர்பால்டிக்
  8. ஏர்கலின்
  9. அலஸ்கா ஏர்லைன்ஸ்
  10. ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ்
  11. அஸெர்பைஜியன் ஏர்லைன்ஸ்
  12. பாங்காக் ஏர்வேஸ்
  13. பல்கரியா ஏர்
  14. சலையர் ஏவியேஷன்
  15. க்ரோஅடிய ஏர்லைன்ஸ்
  16. எடிஹட் ஏர்வேஸ்
  17. பின்னையர்
  18. பிளைபி
  19. ஜார்ஜியன் ஏர்வேஸ்
  20. கோல் டிரான்ஸ்போர்ட்ஸ் ஏரோஸ்
  21. ஜப்பான் ஏர்லைன்ஸ்
  22. ஜெட் ஏர்வேஸ் [2]
  23. லுக்ஃஸைர்
  24. மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்
  25. மான்டேனேக்ரோ ஏர்லைன்ஸ்
  26. ஸ்விஸ் ஏர்லைன்ஸ்
  27. TAAG ஆங்க்லோ ஏர்லைன்ஸ்
  28. உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ்
  29. வெஸ்ட்ஜெட்
Remove ads

உயர்தர வழித்தடங்கள்

ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் உயர்தர வழித்தடங்களாக பாரிஸ் – டௌலௌஸ், டௌலௌஸ் – பாரிஸ், நைஸ் – பாரிஸ் மற்றும் பாரிஸ் – நைஸ் ஆகிய வழித்தடங்களின் விமானச் சேவைகள் உள்ளன. இந்த வழித்தடங்களில் முறையே வாரத்திற்கு 132, 123, 97 மற்றும் 88 விமானங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன் மட்டுமல்லாது குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானச் சேவை வழித்தடங்களாக, இக்னஸு பால்ஸ் – ரியோ டி ஜனேரியோ மற்றும் மான்ட்ரெல் – கல்கேரி ஆகியவை உள்ளன.[3]

Remove ads

விமானக் குழு வரலாறு

ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் இதற்கு முன்பு பணியாற்றிய விமானக் குழு பற்றிய பட்டியல்:[4]

மேலதிகத் தகவல்கள் Aircraft, Introduced ...

பரவலான கலாச்சாரம்

கேன்ஸ் திரைப்பட விழாவின் அலுவலக ரீதியான விமானச் சேவையினை ஏர் பிரான்ஸ் புரிகிறது.[19]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads