ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலைக்குச் செல்லும் வழியில், 15 கல் தொலைவில் சித்தன்னவாசல் குன்றில் இந்த சமணப்படுக்கைகளும் கல்வெட்டுக்களும் அமைந்து உள்ளன.
அமைவிடம்
இந்திய ஒன்றியத்தில், தமிழ்நாட்டில்,புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் என்னும் சிற்றூருக்கு அருகில் சித்தன்னவாசல் குன்றில் இந்த சமணர் படுக்கைகள், கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.[1][2]
சமணப்படுக்கையின் அமைவிடம்
குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். இங்குதான் சமண முனிவர்கள் தங்கி இருந்தார்கள். இக்குகைக்குச் செல்ல மேற்குப்பகுதியில் இருந்து குன்றின் மீதேறி குகை வாயிலின் ஏழு படிக்கட்டுகளைக்கடந்து குகையின் உள்ளே செல்வதால் இவ்விடம் ‘ஏழடிப்பட்டம்’ என்று அழைக்கப்பெறுகின்றது. இந்த இயற்கைக்குகையில் பளிங்கினை ஒத்த வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் ஆன 17 எண்ணிக்கையிலான கற்படுக்கைகள் இங்கு காணப்பெறுகின்றன.
Remove ads
தமிழ் பிராமி கல்வெட்டுக்கள்
இங்குள்ள படுக்கைகளில் பழமையானதும் மிகப்பெரியதுமான படுக்கையில், கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்துக்களால் உருவாக்கப்பெற்றுள்ளது. கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கல்வெட்டு “யோமிநாட்டுக் குமட்டூர்” பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம் என்று உரைக்கிறது. கிபி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க்கல்வெட்டு ஒன்றில் கடுந்தவம் புரிந்த சமணத்துறவிகளைப்பற்றி அறியலாம்.
இதனையும் காண்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads