ஏ. மோகன்
இந்திய திரைப்பட்ட படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், விநியோகத்தர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எடிட்டர் மோகன் என்று பரவலாக அறியப்படும் ஏ. மோகன் (Editor Mohan) (பிறப்பு:முகமது ஜின்னா அப்துல் காதர்) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட படத்தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.[1][2] எம். எம். மூவி ஆர்ட்சு, எம். எல். மூவி ஆர்ட்சு ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை இவர் வைத்திருக்கிறார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
முகமது ஜின்னா அப்துல் காதர் என்ற இயற்பெயர் கொண்ட படத்தொகுப்பாளர் மோகன் தமிழ்நாட்டின் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த தமிழ் இராவுத்தர் குடும்பத்தில் பிறந்தார். இவரது மனைவி வரலட்சுமி மோகன்.[3][2] இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் மோகன் ராஜா ஒரு திரைப்பட இயக்குநர், அவரது பெரும்பாலான படங்களில் இளைய மகன் ஜெயம் ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் இவரது மகள் ரோஜா ஒரு பல் மருத்துவர்.[4]
Remove ads
தொழில் வாழ்க்கை
மோகன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி ஏறத்தாழ 200 படங்களில் பணியாற்றினார். இவர் 10 தெலுங்குத் திரைப்படங்களையும், 5 தமிழ்த் படங்களையும் தயாரித்தார். மேலும் தெலுங்கிலிருந்து 60 திரைப்படங்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்தார்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
- உதவி படத்தொகுப்பாளர்
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
- அரசிளங்குமரி (1961)
- குருவுனு மிஞ்சின சிஷ்யுடு (1963)
- நவக்கிரக பூஜை மகிமா (1964)
- அக்கி பிடுகு (1964)
- சிக்காடு தொரக்குடு (1967)
- கடலடு வதலடு (1969)
- படத்தொகுப்பு
- பிளஸ் ஒன் + 1 (2016)
- தயாரிப்பாளராக
- ஒரு தொட்டில் சபதம் (1989)
- மாமகாரு (1991)
- பாவ பாவமரிரி (1993)
- சுபமஸ்து (1995)
- ஹிட்லர் (1997)
- மானசிச்சி சூடு (1998)
- ஹனுமான் ஜங்க்சன் (2001)
- ஜெயம் (2003)
- தில்லாலங்கடி (2010)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads