ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய அமெரிக்கக் கடற்படைத் தேசிய அருங்காட்சியகம் என்ற முழுப்பெயர் கொண்ட ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம் (U.S. Navy Museum) ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதன்மை அருங்காட்சியகம் ஆகும். இது, அமெரிக்காவின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள வாசிங்டன் கடற்படை தளப் பகுதியில் உள்ள பழைய கடற்படைச் சுடுகலன் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றுத் திட்டமான கடற்படை வரலாற்று மையத்தின் ஒரு பகுதியான இந்த அருங்காட்சியகம், இக் கடற்படையின் 12 அருங்காட்சியகங்களில் ஒன்று.


இந்த அருங்காட்சியகத்தில், கப்பல் மாதிரிகள், சீருடைகள் உட்பட்ட பலவகையான கடற்படையோடு தொடர்புள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது விடய அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Remove ads
வெளியிணைப்புகள்
- ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியக இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-08-25 at the வந்தவழி இயந்திரம்
- ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2008-04-21 at the வந்தவழி இயந்திரம் காட்சிப்பொருட்களின் படங்கள்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads