ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்

From Wikipedia, the free encyclopedia

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்
Remove ads

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உள்ளடக்கில் இருக்கிற அரசியல் பிரிவுகள் (US State) :

  • ஐம்பது மாநிலங்கள் (அதிகாரபூர்வமாக 46 மாநிலங்களும் நான்கு பொதுநலவாயங்களும்). இந்த மாநிலங்கள் மாவட்டங்கள், நகரங்கள், ஊர்களாக பிரிந்து கொண்டு இருக்கின்றன. அமெரிக்க ஆரம்பத்தில் இருந்த 13 மாநிலங்களை தவிர பல மாநிலங்களும் அமெரிக்க காங்கிரஸ் சட்டத்தின் படி ஐக்கிய அமெரிக்காவில் சேர்க்கப்பட்டன.[1][2][3]
  • கொலம்பியா மாவட்டம் என்றழைக்கப்பட்ட சிறப்பு மாவட்டம். இங்கேயே அமெரிக்கத் தலைநகரம் அமைந்துள்ளது. கொலம்பியா மாவட்டத்துக்கு அமெரிக்க சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை.
  • பழங்குடிகளுக்கு ஒதுக்கிய நிலங்கள்: அனைத்து ஒதுக்கிய நிலங்களும் ஏதாவது ஒரு மாநிலத்தில் அமைந்துள்ளன, ஆனால் இப்பகுதிகளுக்கு ஓரளவு விடுதலை உள்ளது. சில மாநில சட்டங்கள் இப்பகுதிகளில் பயன்பாட்டில் இல்லை.
  • அமெரிக்காவின் நிலப்பகுதிகள்: பால்மைரா அடோல் மட்டும் அமெரிக்காவின் ஒருங்கிணைக்கப்பட்ட நிலப்பகுதி (incorporated territory), ஆனால் பல நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்படவில்லை.
  • இராணுவத் தளங்கள்: குவாண்டானமோ விரிகுடா போன்ற இடங்களில் இராணுவத் தளங்கள் அமெரிக்க நிர்வாகத்தில் உள்ளன. வெளிநாடுகளில் அமைந்த தூதரகங்களும் அமெரிக்க நிர்வாகத்தில் உள்ளன.
Thumb
ஐக்கிய அமெரிக்காவின் மாநில அரசுகள்

மொத்தத்தில் அமெரிக்காவில் ஏறத்தாழ 85,000 அரசியல் பிரிவுகள் உள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads