ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பொருளியல் தொய்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய அமெரிக்காவின்பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆகத்து 1929இல் அமெரிக்கப் பொருளியலின் பின்னடைவை அடுத்து நிகழ்ந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு மாதங்களாக குறைந்து வந்தபோதிலும் 1929 அக்டோபரில் நிகழ்ந்த வால்வீதி வீழ்ச்சிக்குப் பின்னரே பொருளியல் பின்னடைவின் தாக்கங்கள் உணரப்படலாயின. உலகளாவிய பெரும் பொருளியல் வீழ்ச்சியும் தொடர்ந்தது. இதனை அடுத்த பத்தாண்டுகளில் மிகுதியானவர்களுக்கு வேலையில்லாமை,வறுமை,குறைந்த இலாபங்கள்,பணவாட்டம், வீழ்ச்சியடைந்த வேளாண் வருமானம் ஆகியன ஏற்பட்டன. பல பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களும் தனிநபர் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கைவராது போயின. இதற்கான காரணங்கள் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளால் பொருளாதார வருங்காலத்தைக் குறித்த நம்பிக்கை தளரலாயிற்று.[1]


இதற்கான வழமையான காரணங்களாக கூடுதலான வாடிக்கையாளர் கடன், அளவிற்கு மீறிய கடன்கள் கொடுத்த வங்கிகளையும் முதலீட்டாளர்களையும் சரியாக கட்டுப்படுத்தப்படாத சந்தைகள்,மற்றும் விரைவான வளர்ச்சி கொண்ட புதிய தொழில்கள் உருவாகதிருந்தது ஆகியனவாகும். இவற்றின் விளைவாக எழுந்த குறைந்த செலவழித்தலும் குறைந்த தயாரிப்பும் நம்பிக்கைத் தளர்வும் இந்த வீழ்ச்சியை விரைவுபடுத்தின.[2]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads