ஐதரசன் குண்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐதரசன் குண்டு (எச்-குண்டு, இணைவு குண்டு அல்லது வெப்ப அணுக்கரு குண்டு எனவும் அறியப்படுவது) இலகுவான அணுக்கருவில் இணைவினால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓர் அணு குண்டு ஆகும்.

டெல்லர்-உலாம் வடிவமைப்பு

A : பிளவு கட்டம்
B : இணைவு கட்டம்
1. அதிர்வெடி தொகுப்பு
2. யுரேனியம் 238 (« இடைநிலை»)
3. வெற்றிடம் (« மிதத்தல்»)
4. திரித்தியம் வளிமம் (« கூடுதலாக», நீலத்தில்) புளீடோனியம் அலது யுரேனியம் சுற்றியிருக்க
5. பல்தைரீன்
6. யுரேனியம் 238 (« இடைநிலை»)
7. லித்தியம் டியூட்ரைடு 6 (இணைவு எரிபொருள்)
8. புளூடோனியம் (பற்றவைப்பு)
9. எதிரொளிப்பு சட்டகம் (X கதிர்களை இணைவு வினையாக்கம் ஏற்படுமாறு எதிரொளிக்க)
டெல்லர்-உலாம் வடிவமைப்பு (Teller–Ulam design) உலகின் அணு குண்டுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் அணு ஆயுத வடிவமைப்பு ஆகும்.[1] ஐதரசன் குண்டின் மறைபொருளாக டெல்லர்-உலாம் வடிவமைப்பு கருதப்படுகிறது. இத்தகைய அணுவாயுதங்களில் தங்கள் வெடிப்புத் திறனின் பெரும்பான்மையான ஆற்றலை இவை அணுக்கரு இணைவு ஐதரசனிலிருந்து பெறுவதால் ஐதரசன் குண்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. மேலும் இவை "இரு கட்ட " அணு ஆயுதங்கள், வெப்ப அணுக்கரு குண்டுகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. 1951ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் இதன் வரைவிற்கு வழிவகுத்த அங்கேரிய-அமெரிக்கர் எட்வர்ட் டெல்லர் மற்றும் போலந்து-அமெரிக்க கணிதவியலாளர் இசுடானிசுலா உலாம் நினைவாக இந்த வடிவமைப்பு பெயரிடப்பட்டுள்ளது. இது மெகாடன் அளவுள்ள அணுகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சிறு ஆயுதங்களிலும் இந்த வடிவமைப்பு சிறப்பாக இயங்குகிறது. பெரும் அணு ஆயுத நாடுகளில் இந்த முறையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads