ஐதரசன் பேரொட்சைடு அல்லது ஐதரசன் பெராக்சைடு (Hydrogen Peroxide) என்னும் வேதிப்பொருள் (H2O2) மிகவும் மங்கிய நீல நிறம் கொண்ட ஒரு நீர்மம். நீரைக்காட்டிலும் சிறிது பாகுத்தன்மை கூடிய இது, மிகவும் ஐதான (அடர்த்தி குறைவான) கரைசலாக இருக்கும்போது நிறமற்றதாகத் தெரியும். இது வலிமையான ஒட்சியேற்றும் (ஆக்சிசனேற்றும்) இயல்புகளைக் கொண்டிருப்பதோடு, நல்ல வெளுப்பாக்கியும் ஆகும். இது தொற்றுநீக்கி ஆகவும், நுண்ணுயிரி எதிர்ப்பியாகவும், ஒட்சியேற்றியாகவும் (ஆக்சிசனேற்றியாகவும்) பயன்படுவதுடன், ஏவுகணைகளில் உந்துபொருளாகவும் பயன்படுகின்றது.