ஐதரோகுளோரிக் காடி

From Wikipedia, the free encyclopedia

ஐதரோகுளோரிக் காடி
Remove ads

ஐதரோகுளோரிக் அமிலம் (Hydrochloric acid) என்பது HCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட பல்வேறு வகையான தொழிற்சலைப் பயன்களையும் கொண்ட வலிமையான ஒரு கனிம அமிலமாகும். அரிக்கும் தன்மை கொண்ட இந்த அமிலம் நிறமற்றது. காரச்சுவை கொண்டது. ஐதரோகுளோரிக் காடி என்றும் இதை அழைக்கிறார்கள். ஐதரசன் குளோரைடு வாயு நீரில் கரைந்துள்ள கரைசல் ஐதரோ குளோரிக் அமிலம் எனப்படுகிறது. கரிமக் காரத்துடன் இது வினைபுரிந்து ஐதரோகுளோரைடு உப்பு உருவாகிறது. கி.மு 800 காலப்பகுதியில் இரசவாத நிபுணரான யபீர் இபின் அயன் என்பவரால் ஐதரோகுளோரிக் அமிலம் கண்டுபிடிக்கப்பட்டது [1][2]. அசிதம் சாலிசு, முரியாட்டிக் அமிலம், உப்புகளின் சிபிரிட்டு, ஐதரோனியம் குளோரைடு என்று வரலாற்றில் பலவாறாக ஐதரோகுளோரிக் அமிலம் அழைக்கப்பட்டது. பாறை உப்பு மற்றும் பச்சை துத்தம் போன்ற மூலப்பொருள்களில் இருந்து 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேசில்லசு வேலண்டினசு என்ற இரசவாதி ஐதரோகுளோரிக் அமிலத்தைத் தயாரித்தார். 17 ஆம் நூற்றாண்டில் உப்பு மற்றும் கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி யோகான் ருடால்ப் கிளௌபர் இதைத் தயாரித்தார். 16 ஆம் நூற்றாண்டில் முறையாக ஐதரோகுளோரிக் அமிலத்தைப் பற்றி லிபாவியசு விவரித்தார். பின்னர் கிளௌபர், பிரைசுட்லி மற்றும் டேவி ஆகிய விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் இதைப் பயன்படுத்தினர். அழுத்ததிற்கு உட்படுத்தப்படாவிட்டல் அல்லது குளிர்விக்கப்படாவிட்டால், ஒருவேளை 60% அல்லது அதற்குக் குறைவான தண்ணீரைக் கொண்டிருந்தால் ஐதரோகுளோரிக் அமிலம் வாயுவாக மாறிவிடும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

தொழில்துறை புரட்சி தொடங்கிய காலத்தில் ஐதரோகுளோரிக் அமிலத்தின் உற்பத்தி தொடங்கியது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட அமிலம் வேதியியல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டது. பாலி வினைல் குளோரைடு, மெத்திலீன் டைபீனைல் டையைசோசயனேட்டு, ப்பாலியூரித்தேன் தயாரிப்புக்குத் தேவையான தொலுயீன் டையைசோசயனேட்டு போன்ற வேதிப்பொருள்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டன. சிறுதொழில் அளவிலும் ஐதரோ குளோரிக் அமிலம் எண்ணற்ற பயன்களைக் கொண்டிருந்தது. துப்புரவுப் பணி, உணவுச் சேர்க்கைப் பொருள்கள், கெலாட்டின், தோல் பதப்படுத்துதல், உள்ளிட்ட வீட்டுப் பயன்களுக்கும் இது பயன்படுத்தப்பட்டது.

Remove ads

வரலாறு

ஆரம்பகால வரலாற்றில் இருந்தே ஐதரோகுளோரிக் அமிலம் ஒரு முக்கியமான மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வேதிப் பொருளாக கருதப்பட்டது. கி.மு 800 ஆம் ஆண்டு ரசவாதி யபிர் இபின் அயன் இதைக் கண்டுபிடித்தார் [2][3].

ஐதரோகுளோரிக் அமிலமும் நைட்ரிக் அமிலமும் கலந்த கலவை இராச திராவகம் எனப்படுகிறது. சால் அமோனியாக் என்ற கனிமத்தை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து இதைத் தயாரிக்கிறார்கள். ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவரான 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூடோ-கெபர் இதைக் குறித்து விவரித்துள்ளார்[4][5][6][7][8].

இராச திராவகத்தைப் பற்றிய முதலாவது குறிப்புகள் பைசாண்டின் கையெழுத்துப் பிரதிகளில் காணப்பட்டதாக பிற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அவை 13 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தைச் சேர்ந்தவையாகும் [9][10][11][12]. ஐதரோகுளோரிக் அமிலம் முதலில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிபாவியசு என்பவரால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக இவர் உப்பை களிமண் பீங்கான்களில் இட்டு சூடுபடுத்தி தயாரித்ததாகவும் அறியப்படுகிறது [13].

சில ஆசிரியர்கள் தூய்மையான ஐதரோகுளோரிக் அமிலம் 15 ஆம் நூற்றாண்டில் செருமனியின் பெனிடிக்டின் மாங்கு பாசில் வேலண்டைன் என்பவரால் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர் [14]. சாதாரண் உப்பை பச்சை துத்தத்துடன் கலந்து சூடுபடுத்தி இவர் அதைத் தயாரித்தார் எனக் கூறப்படுகிறது.[15] 16 ஆம் நூற்றாண்டு இறுதிவரையில் தூய்மையான ஐதரோகுளோரிக் அமிலம் தயாரிக்கப்பட்டதற்கான சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பிறர் வாதிடுகின்றனர் [9]. [16]

Remove ads

உடலில் பயன்பாடு

நாம் உண்ணும் உணவைச் செரிமானம் செய்யும் காடியாக நம் இரைப்பையில் இது பயன்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு லிட்டர் அளவு இந்தக் காடி நம் வயிற்றுக்குள் சுரக்கிறது. நாம் உண்ணும் உணவை இது இரைப்பையில் சிறுசிறு மூலக் கூறுகளாக மாற்றுகிறது. உணவிலுள்ள உடலுக்கு வேண்டாத நுண்ணுயிரிகளை இது செயலிழக்கச் செய்கிறது. இதனால் இது நம் உடலுக்குப் பாதுகாக்காக அமைகிறது. இது சுரக்கும் பி.எச் அளவு 1.5 - 2.0 கொண்டதாக இருந்தால் அது வலிமை மிக்க காடி ஆகும். ஒரு சிறிய இரும்பைக் கூட இது 24 மணி நேரத்தில் கரைக்க வல்லது. [17]

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads