ஐந்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐந்திரம் என்னும் பெயரிலும் அதன் உச்சரிப்பிலும் உள்ள கட்டுரைகள்
- ஐந்திரம் (இலக்கண நூல்) அல்லது அய்ந்திரம்-
- பனம்பாரனாரின் பாயிரம் தொல்காப்பிய நூலுக்குத் தரப்பட்டுள்ள பாயிரம் ஆகும். இதில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொல்காப்பியத்தில் காணப்படுகிற எழுத்து சொல், பொருள் இலக்கணத்தின் ஏதாவது ஒன்றாகவே ஐந்திரம் இருக்கக்கூடும் என்று அறுதியிட்டுக் கூற முடியும்.
- ஐந்திரம் என்கிற தலைப்பு தொல்காப்பிய அகத்திணையோடு பொருந்திப் போக முடிகிற நிலையில், ஐந்திரம் என்பது அகத்திணை இலக்கணம் என்று கருத இடம் இருக்கிறது.
- மேலும் அகத்திணை இலக்கணத்திற்கான முதல்பொருளான நிலங்கள் ஐந்து. திறன் என்பது வெளிப்படுகிற ஆற்றல்- திரம் என்பது குவிந்த ஆற்றல்- என்கிற நிலையில், ஐந்திரம் என்கிற தமிழ்ச்சொல் நிலம், நீர், தீ, காற்று. விசும்பு என்கிற பஞ்சபூதங்களையே குறிக்கும் என்று சில தமிழ்அறிஞர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
- இன்றைக்குத் தமிழர், தங்கள் மதம் ஐந்திரம் என்று தெரிவித்துக் கொள்ளும் வகைக்கு, தமிழ்முன்னோர்களால் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது, தொல்காப்பியததிற்கு முந்து நூலாக ஐந்திரம். அதன் பொருட்டே அகத்திணை பேசிய தொல்காப்பியரை 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று பனம்பாரனார், தொல்காப்பிய நூலுக்குத் தரப்பட்டுள்ள பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். என்று சில தமிழ்அறிஞர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads