ஐபீரோ-அமெரிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐபீரோ-அமெரிக்கா (எசுப்பானியம்: Iberoamérica, Portuguese: Ibero-América) அல்லது ஐபீரிய அமெரிக்கா (Iberian America) என்பது அமெரிக்கக் கண்டங்களில் உள்ள எசுப்பானிய மற்றும் போர்த்துக்கேய மொழிகளை முதன்மையானதாகக் கொண்ட நாடுகளை உள்ளடக்கிய பகுதி ஆகும். பொதுவாக ஐபீரோ-அமெரிக்கா என்பது எசுப்பானியா மற்றும் போர்த்துக்கல் நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் முன்னர் இருந்த அமெரிக்கப் பகுதிகளையே குறிக்கும். ஐபீரோ-அமெரிக்க உச்சி மாநாட்டில் எசுப்பானிய, போர்த்துக்கேய நாடுகளும் பங்குபெறும். ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பில் எசுப்பானிய, போர்த்துக்கேய நாடுகளுடன் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள எசுப்பானிய மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடான எக்குவடோரியல் கினியும் உறுப்பினராக உள்ளது.[1][2] ஆனால், போர்த்துக்கீச மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகள் இவ்வமைப்பில் இடம்பெறவில்லை.

ஐபீரோ-, ஐபீரியன் என்பவை ஐரோப்பாவில் உள்ள ஐபீரியன் தீபகற்பத்தை குறிக்கிறது. இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியன் தீபகற்பத்தில் அடங்கும் . ஐபீரோ-அமெரிக்கா என்பது வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் உள்ள எஸ்பானிய மொழி அதிகம் பேசும் நாடுகளையும் போர்த்துகேய மொழியை முதன்மையாக கொண்ட நாடான பிரேசில்லையும் குறிக்கிறது . ஐபீரோ-அமெரிக்க நாடுகளுடன் பிரஞ்சு மொழி பேசும் நாடான ஹெய்தி, பிரான்ஸ் வெளிநாட்டு துறை கட்டுபாட்டில் உள்ள பகுதிகளான பிரெஞ்சு கயானா, மார்டீனிக் மற்றும் குவாதலூப்பே, பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளான செயிண்ட் மார்டின், செயிண்ட் பார்த்தலெமி ஆகியவை இலத்தீன் அமெரிக்கா என்று அழைக்கபடுகிறது .
1991ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபீரோ-அமெரிக்கன் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது . இந்த மாநாட்டில் ஐபீரோ-அமெரிக்க நாடுகளுடன் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் அன்டோரா நாடுகளும் உறுப்பினர்களாக பங்கு பெறும்,[3][4]
Remove ads
ஐபீரோ-அமெரிக்க நாடுகள்
- எஸ்பானிய மொழி பேசும் நாடுகள் : (430,567,462 மக்கள் )
அர்ஜென்டீனா(Argentina) 42,669,500
பொலிவியா(Bolivia) 10,556,102
சிலி (Chile) 17,772,871
கொலொம்பியா(Colombia) 47,425,437
கோஸ்ட்டா ரிக்கா (Costa Rica) 4,586,353
கியூபா (Cuba)11,167,325
டொமினிக்கன் குடியரசு(Dominican Republic) 9,445,281
எக்குவடோர் (Ecuador) 15,223,680
எல் சால்வடோர் (El Salvador) 6,134,000
குவாத்தமாலா (Guatemala)15,806,675
ஹொண்டுராஸ் (Honduras) 8,249,574
மெக்சிக்கோ (Mexico) 118,395,054
நிக்கராகுவா (Nicaragua) 6,071,045
பனாமா (Panama) 3,608,431
பராகுவே (Paraguay) 6,800,284
பெரு (Peru) 30,814,175
புவேர்ட்டோ ரிக்கோ(Puerto Rico) 3,667,084
எசுப்பானியா(Spain) 46,704,314
உருகுவே (Uruguay) 3,324,460
வெனிசுவேலா Venezuela 28,946,101
- போர்த்துக்கேய மொழி பேசும் நாடுகள்: (211,520,003 மக்கள்)
பிரேசில் (Brazil) 201,032,714
போர்த்துகல்(Portugal) 10,487,289
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
