இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி (IRNSS-1C) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இதுபோல் இவ்வரிசையில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.[1][2]
உருவாக்கம்
இச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியது. இடஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.[3]
ஏவுதல்
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 15 அக்டோபர் 2014 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[4]
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads