ஒகுல் கைமிஸ்
குயுக் கானின் மனைவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒகுல் கைமிசு (Oghul Qaimish)(இறப்பு 1251) குயுக் கானின் முதன்மை மனைவியாவார். 1248-ல் கணவன் இறந்த பின்னர் மங்கோலியப் பேரரசை ஆட்சி செய்தார். இவர் மெர்கிட் பழங்குடியினரின் சந்ததியாவார். இருப்பினும், எச். எச். கோவொர்த் அவர் ஒரு ஒயிரட்டாக இருக்கலாம் என்று நம்புகிறார்.[1]
வாழ்க்கை
1216-19ஆம் ஆண்டில் இவரது குலத்தின் கிளர்ச்சியை ஒடுக்கிய பிறகு செங்கிஸ் கான் இவரை குயுக்குக்கு மனைவியாக வழங்கினார். ஒகுல் கைமிசு குயுக்குக்கு கோஜா மற்றும் நகு என்ற இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தார். இவரது கணவர் துருக்கிசுதானின் கும்-செங்கிரில் இறந்தபோது, தனது கணவரின் ஒர்டோவை ஓகோடிக்குப் பரிசாக வழங்கப்பட்ட நிலமான எமில் ஆறு-கோபக் பகுதியில் 1248ம் ஆண்டு வைத்து இருந்தார். குயுக்கின் தலைமை அதிகாரிகளான, சின்கை, கதக் மற்றும் பாலா, ஒகுல் ஆட்சியாளராக பணியாற்ற உதவினர். இவர் மங்கோலிய சாமன்களுடன் தனது நேரத்தை செலவிட்டார் மற்றும் இவரது மாமியார் டோரேஜினின் அரசியல் திறமைகளின்றி இருந்தார். அவரது மகன்கள், நகு மற்றும் கோஜா, மற்றும் ஓகோடியின் பேரன் சிரமுன் ஆகியோர், அரியணைக்குத் தங்கள் உரிமையை நிலைநாட்ட முயன்றபோது, ஜகாடேய் வம்ச கான்கள் மற்றும் யெசு மோங்கே ஆகியோர் ஒகுல் கைமிசுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads