ஒசாமு தெசூகா
ஜப்பானிய கார்ட்டூனிஸ்ட் மற்றும் அனிமேட்டர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒசாமு தெசூகா (手塚 治虫, born 手塚 治 தெசூகா ஒசாமு ?, நவம்பர் 3, 1928 – பிப்ரவரி 9, 1989) என்பவர் சப்பானிய மாங்கா கலைஞரும், கேலிப்பட ஓவியரும், அசைவூட்டப் படக்கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளரும், களச்செயல்பாட்டாளரும் ஆவார். ஒசாகா மாநிலத்தில் பிறந்த இவர், அஸ்ட்ரோ பாய், கிம்பா தி ஒயிட் லயன், பிளாக் ஜாக் போன்ற வரைகதை (காமிக்ஸ்) தொடர்களைப் படைத்ததன் பொருட்டு நன்கு அறியப்படுகிறார். அவர் குன்றாத ஊக்கத்துடன் படைப்புகளை ஏராளமாக உருவாக்கியமை, தொழில்நுணுக்கங்களில் முன்னோடியாகச் செயல்பட்டமை, பல்வேறு வகைமைகளைப் புதுமையாக மறுவரையறை செய்தமை ஆகிய காரணங்களுக்காக "மாங்காவின் தந்தை", "மாங்காவின் ஞானத்தந்தை", "மாங்காவின் கடவுள்" என்றெல்லாம் போற்றப்படுகிறார். மேலும், அவரது தொடக்க நாட்களில் தமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த வால்ட் டிஸ்னிக்கு இணையான ஒரு சப்பானியராகவே கருதப்படுகிறார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads