ஒட்டக்கூத்தர்

தமிழ்ப் புலவர் From Wikipedia, the free encyclopedia

ஒட்டக்கூத்தர்
Remove ads

ஒட்டக்கூத்தர் (Ottakoothar) என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் ராஜகுருவாகவும்[சான்று தேவை], அவைப் புலவராகவும், அமைச்சராகவும்[சான்று தேவை] பணியாற்றியவர். இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன.[1]

விரைவான உண்மைகள் கவிச்சக்கரவத்திஒட்டக்கூத்தர், பிறப்பு ...
Remove ads

பிறப்பு

இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி (இன்றைய திருவெறும்பூர்) என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தார்.

கூத்தர் முதலியார் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.[2][3]

வரலாறு

நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடல்கள் சுவை மிக்கவை.

இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.[4] இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.

பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.[5]

இவர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர், சருவஞ்ஞன கவி இன்ன பல பட்டங்களைப் பெற்றார் இதில் கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் ஒட்டக்கூத்தர், கம்பர், சயங்கொண்டார் என மூன்று பேருக்கு மட்டுமே உள்ளது.[6]

ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி கும்பகோணம் தாராசுரம் அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

Remove ads

ஒட்டக்கூத்தரின் நூல்கள்

இவையன்றி கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்

  • "கவிச்சக்ரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் சரித்திரம்" - 1913 கோயமுத்தூர் சாரதாவிலாஸ சபையின் காரியதரிசி சி. கு. நாராயணசாமி முதலியார் மதராஸ் : ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி
  • 'கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்' டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 1985 சென்னை : பாரி நிலையம்
  • 'ஒட்டக்கூத்தர்' மு. அருணாசலம் திருச்சிற்றம்பலம், மாயூரம் : காந்தி வித்தியாலயம், 1972
  • ' ஓட்டக்கூத்தரின் ஈட்டியெழுப்பது ' புலவர் பெ.வேலு, 1981 தமிழ்ச்சங்கம் தாரமங்கலம் சேலம், பக். 1-84.
  • புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
  • நான் கண்ட ஒட்டக்கூத்தர், சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.
Remove ads

சரஸ்வதி கோயில்

கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார்.[7]

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads