ஒத்திசைவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயற்பியலில், ஒத்திசைவு அல்லது பரிவு (resonance) என்பது ஒரு அதிர்வுறும் அமைப்பு அல்லது புற விசையானது வேறொரு அமைப்பினை குறிப்பிட்ட அதிர்வெண்களில் பெரிய வீச்சத்துடன் இயக்கும் நிகழ்வு ஆகும்.
தொகுதியின் வீச்சம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள அதிர்வெண்கள் பரிவுறும் அதிர்வெண்கள், ஒத்திசைவுறும் அதிர்வெண்கள் அல்லது இயற்கை அதிர்வெண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒத்திசைவு அதிர்வெண்களில் சிறிய ஆவர்த்தனமான விசை கூட பெரிய வீச்சமுடைய அலைவுகளை தொகுதிகளில் உண்டாக்கின்றன. இவை தேக்கி வைக்கப்பட்டிருக்கும் அதிர்வு ஆற்றல் மூலம் உண்டாகின்றன.
ஒத்திசைவானது ஓர் அமைப்பு வெவ்வேறு ஆற்றல் சேமிப்பு முறைகளுக்கு இடையில் இலகுவாக ஆற்றலை சேமித்தும் பரிமாற்றக்கூடியதாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது.(ஊசலினை எடுத்துக்கொண்டால் இவ் ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும் நிலை ஆற்றலாகவும் உள்ளது.) ஆனால் ஒவ்வொரு சுழற்சியிலும் சிறிதளவு ஆற்றல் இழக்கப்படுகிறது, இது தணிவிப்பு எனப்படுகிறது. தணிவிப்பின் அளவு சிறிதாக இருக்கும் போது ஒத்திசைவு அதிர்வெண் தொகுதியின் இயற்கை அதிர்வெண்ணிற்கு அண்ணளவாக சமனாக இருக்கும், இயற்கை அதிர்வெண் எனப்படுவது தொகுதியின் தூண்டப்படாத அதிர்வெண் ஆகும். சில அமைப்புகள் பல ஒன்றிற்கு ஒன்று மாறுபட்ட ஒத்திசைவு அதிர்வெண்களை கொண்டுள்ளன.
ஒத்திசைவு என்பது அனைத்து விதமான அதிர்வுகளில் அல்லது அலைகளிலும் ஏற்படுகின்றது. அவையாவன இயந்திர அதிர்வு, ஒலி அதிர்வு, மின்காந்த அதிர்வு, அணுக்கரு காந்த அதிர்வு (NMR), எலக்ட்ரான் சுழற்சி அதிர்வு (ESR) மற்றும் குவாண்டம் அலை செயல்பாடுகளின் ஒத்திசைவு ஆகியனவாகும்.
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads