ஒப்புரவாண்மை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒப்புரவாண்மை (Altruism) என்பது தன்னையன்றிப் பிறரொருவர்க்காகவென்றே ஒப்புரவு அல்லது நன்மை செய்யும் நோக்கங்கொண்ட நடத்தையும் கோட்பாடுமாகும்; ஒப்புரவாண்மை என்ற கிளவி தன்னலம் என்பதற்கு நேரெதிர்மறையான முரண்பாடாக வழங்குவதாகும்: ஏனெனில் தன்னலம் என்ற கிளவி தனக்கு நலஞ்செய்வதொன்றையே குறியாகக் கொண்ட நடத்தைக்கு வழங்குவது[1].
“பொல்லாங்கு” என்பது இன்னும் மேற்படியான முரண்பாட்டைச் சுட்டும்; ஏனெனில் பிறர்க்குத் தீமை இழைக்கவேண்டும் என்பதற்காகவே தீங்கை இழைக்கும் பொல்லாத எண்ணங்கொண்ட நடத்தையைக் குறிக்கும்.
ஆயினும், சிற்சில சமயங்களில் ஒப்புரவாண்மை என்பதற்கு ஒப்புரவின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமே பிறர்க்கு ஒப்புரவு செய்தலைமட்டுமே குறிக்கும் விரிவான பொருள்வழக்கமும் உண்டு. இத்தகைய ஒப்புரவாண்மையை மாந்தரல்லாத விலங்குகட்கும் பொருத்தி வழங்கலாம்: தாய்க்கரடிகள் போன்றவை தம் குட்டிகளை வேற்று விலங்குகளின் தாக்கலிலிருந்து காக்கும்பொழுது தம்முடைய உயிரையேகூடக் கேட்டுக்கு ஆளாக்கிக் காக்கின்றன. அப்படியான ஒப்புரவில் முதிர்கரடிகள் தம் குட்டிகளின்பொருட்டாகவே செயற்படுவதாகக் கூற எந்த அடிப்படையும் இல்லை என்று சில மெய்யியலார் கூறுவர்[1]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads