ஒயில் கும்மி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒயில் கும்மி என்பது, ஒயிலாட்டத்துடன் கையில் கும்மியடித்துக் கொண்டே ஆடும் ஒருவகை ஆட்டமாகும்.[1] இது குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகை ஆட்டமாகும். இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை. இக்கலை நாட்டுக் கொட்டு ஆட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.[2]இந்த ஆட்டம் கொங்கு மண்டலத்தில் வேளாண் மக்களால் ஆடப்படுகிறது. இவ்வாட்டத்திற்கென, தனியானப் பயிற்சிகள் எதுவும் இல்லை. இக்கலையில் பானைத்தாளம், தோற்பானைத்தாளம் , சிங்கி ஆகிய இசைக்கருவிகளுள், ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். போதுவாக விழா நேரங்களிலும், திருமணத்தின்போதும் ஒயில் கும்மி ஆடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இடையர், கள்ளர் போன்ற இடைநிலைச் சாதியினரே பங்கேற்கின்றனர் .வேளாண் தொழிலில் செழிப்பு வேண்டியும், வெப்ப நோய் குறைய வேண்டியும், மழையை எதிர்நோக்கியும், ஒயில் கும்மி நிகழ்த்தப்படுகிறது .
Remove ads
ஆடும் முறை
இந்த ஆட்டத்தை வரிசையாகவம், வட்டமாகவும் இருவகையிலும் ஆடுவர். ஒருவரில் ஆரம்பித்து எத்தனைப்பேர் வேண்டுமானாலும் ஆடலாம். பொதுவாக இந்த ஆட்டமாது பக்கவாதியம் இல்லாமல் கைதட்டு ஓசையை மட்டும் கொண்டு அமைந்த கலையாக இது உள்ளது. என்றாலும் பக்கவாத்தியமும், துவரைமணிச் சலங்கையும் கொண்டு ஆடுவது சிறப்பு.[3] வேட்டியைப் பஞ்சகச்சம் வைத்துக் கட்டி, வண்ணச்சட்டை, தலையில் குஞ்சம் வைத்த தலைப்பாகை, கழுத்தில் பட்டை ஆகியவற்றைக் கட்டியிருப்பர். வாத்தியார் எனப்படும் குரு இவர்களின் எதிர் நிற்பார். இவரே பாட்டையும் ஆட்டத்தையும் துவக்கி வைப்பார். குழுவினர் ஆளோடு ஆள் உரசாமல் ஒரு முழம் இடைவெளியில் நின்று பாடிக்கொண்டே ஆடுவர். இந்த ஒயில் கும்மியில் வரும் பாடல்கள் பொதுவாக சங்கராபரணம் இராகத்தில் அமையும்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads