ஒய். வெங்கடேசுவர தீட்சிதர்

From Wikipedia, the free encyclopedia

ஒய். வெங்கடேசுவர தீட்சிதர்
Remove ads

ஒய் (யக்ஞேஶ்வர தீக்ஷதர்). வெங்கடேச தீட்சதர் ( Y. Venkatesa Dikshadar) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜனதா தளம் சேர்த்த முக்கிய தலைவராக இருந்தவர். அதிமுக ஜெ. அணி சார்பாக போட்டியிட்ட கு. ப. கிருசுணன் என்பவரை தோற்கடித்து, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] திருவானைக்காவல் ஆயிரவரான மகாசைவ சோழிய பிராமணரான இவர், கொங்கு வேளாளர், நாட்டுக் கவுண்டர், அகரம் வெள்ளாஞ் செட்டியார் பலருக்குக் குலகுருவாகப் பாசூர் பெரிய மடம் மடாதிபதியாகவும் இருந்து 2006 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.[2] மேற்படி சமூகங்கள் படிப்பறிவு அடைய தமது திருச்சி தேசியக் கல்லூரியில் ஈரோடு பகுதியினரான தனது சீடர்கள் பெருமளவில் சேர்ந்து படிக்கக் காரணமாக மடாதிபதியான இவர் குடும்பம் இருந்ததால், இவரை ஈ.வே.ரா வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால் ஶ்ரீரங்கம் ஈ.வே.ரா சிலை இவரை வைத்தே திறக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டும் அங்கு உள்ளது.

விரைவான உண்மைகள் ஒய். வெங்கடேசுவர தீட்சதர், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads