ஒரிசா மாநில அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒரிசா மாநில அருங்காட்சியகம் இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

வரலாறு

இந்த அருங்காட்சியகம், 1932 ஆம் ஆண்டில் வரலாற்றாளர்களான பேராசிரியர் என். சி. பனர்ஜி, பேராசிரியர் கான்சியாம் தாஸ் ஆகியோரின் முயற்சியால் ராவென்சா கல்லூரியில் தொடங்கப்பட்டது. 1945-46 காலப்பகுதியில் மாநில அருங்காட்சியகம் எனப் பெயர் மாற்றப்பட்டு பழைய புவனேசுவரில் இருந்த பிரமண்டா கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. 1950 இல் இது பட்டேல் மண்டபத்துக்கு மாற்றப்பட்டுப் பின்னர் மீண்டும் வேறிடத்துக்கு மாற்றப்பட்டது.

1957 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி இந்தியாவின் முதல் சனாதிபதியான டாக்டர் இராசேந்திரப் பிரசாத் அவர்கள் இந்த அருங்காட்சியகத்துக்கான புதிய கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டினார். 1960 இல் அருங்காட்சியகம் இன்று அது உள்ள புதிய கட்டிடத்துக்கு இடம் மாறியது. தொடக்கத்தில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கிய இது பின்னர் 1958 ஆம் ஆண்டில் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

Remove ads

காட்சிப் பொருட்கள்

தொல்லியல் அருங்காட்சியகமாகத் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள் போன்ற பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பின்னர் இந்த அருங்காட்சியகத்தில் பல வகையான அரும்பொருட்களும் சேர்க்கப்பட்டன. இங்குள்ள பொருட்கள் தொல்லியல், கல்வெட்டியலும் நாணயவியலும், ஆயுதங்கள், சுரங்கவியலும் நிலவியலும், இயற்கை வரலாறு, கலையும் கைப்பணியும், தற்காலக் கலை, மானிடவியல், ஓலைச் சுவடிகள் என ஒன்பது பிரிவுகளாகப் பிரித்துக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads