ஒரு முகத்திரை
2017 இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு முகத்திரை (Oru Mugathirai (English: A mask) என்பது 2017 ஆண்டைய இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியவர் ஆர். செந்தில்நாதன். படத்தில் ரகுமான், சுரேஷ், அதிதி குருராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பின்னணி இசையை பிரேம் குமார் அமைத்துள்ளார். இந்த படமானது 2015 சூலையில் தொடங்கப்பட்டு, 2017 மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
கதை
அதிதி ஆச்சர்யா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரை வைத்தே கதை நகர்கிறது. நாயகிகள் இருவரும் ஒரே கல்லூரியில் மனநல மருத்துவப் பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கல்லூரியில் எலியும்-பூனையுமாக இருக்கும் அதிதி-ஸ்ருதி கல்லூரியில் அடிக்கடி சண்டை பிடிக்கின்றனர். அதே நேரத்தில் அதிதி எப்போதும் முகநூலே கதி என்று இருக்கிறார். முகநூலில் ரோகித் என்ற இளைஞருடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தையும் ரோகித்துடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் லண்டனுக்கு சென்று மேல்படிப்பு படிக்க ரோகித் உதவி செய்வதாகக் கூறியதை நம்பி சென்னைக்கு அதிதி வருகிறார். ஆனால் அவரை அழைத்துச் செல்ல ரோகித் அங்கு வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, அங்கு வரும் மனநல மருத்துவரான ரகுமான், ரோகித் வரும் வரை தனது வீட்டில் தங்குமாறு அழைக்க அதற்கு அதிதியும் சம்மதிக்கிறார்.
மறுபுறத்தில் படத்தின் கதாநாயகனான சுரேஷ் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அந்த நிறுவனத்தில் புதிதாக வேலையில் சேரும் மற்றொரு நாயகியான தேவிகாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் வேறு நிறுவனத்துக்கு மாறும் தேவிகா சுரேஷை கழட்டி விடுகிறார். இதனால் வருந்தும் நாயகன் போதை பழக்கத்திற்கு ஆளாகிறான். அதனைத் தொடர்ந்து போதை பழக்கத்தில் இருந்து மீள மனநல மருத்துரான ரகுமானிடம் சிகிச்சை பெறுகிறார் சுரேஷ்.
இந்த நிலையில், ரோகித் என்ற பெயரில் தன்னுடன் முகநூலில் பேசி வந்தது ரகுமான்தான் என்ற உண்மை அதிதிக்கு தெரியவர, அதிர்ந்து போகும் அவர், எதற்காக ரகுமான் இப்படி செய்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்வதுடன், தான் படித்த மனநல படிப்பின் மூலமாகவே ரகுமானை வழிக்கு கொண்டு வர முடிவு செய்யகிறார். இதன் பிறகு இருவருக்கும் இடையே ஆரம்பிக்கும் ஆடுபுலி ஆட்டமே படத்தின் கதை.
Remove ads
நடிகர்கள்
- ரகுமான் - சத்தியமூர்த்தி ரத்தினவேல் (ரேகித்)
- சுரேஷ் - அர்ஜூன்
- அதிதி குருராஜ் - கண்மணி
- தேவிகா மாதவன்
- டெல்லி கணேஷ்
- மீரா கிருஷ்ணன்
- சுவாமிநாதன்
- சாம்ஸ்
- பாண்டு
- சசி பிரசாந்த் - கிசோர்
- ரேகா சுரேஷ்
தயாரிப்பு
இந்த படம் 2015 சூலையில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் வழியாக இப்படத்தின் இயக்குநரான செந்தில் நாதன் நீண்ட காலம் கழித்து திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னர் திகில் படமான சிவி (2007) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். செந்தில்நாதன், FB (ஸ்டேட்டஸ் போடு சாட் பண்ணு என்ற அடிக்குறிப்புடன்) எனப் பெயரிடப்பட்ட படத்தைத் தொடங்கினார், ஆனால் பிறகு படத்தின் பெயரை ஒரு முகத்திரை என மாற்றினார்.[1] படமானது முகநூலை அடிப்படையாகக் கொண்ட உளவியல் ரீதியான திரில்லர் படம் என்று விவரிக்கப்பட்டது. ரகுமான் ஒரு மனநல மருத்துவராக முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார், உடன் சுரேஷ் மற்றும் அதிதி குரூராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.[2][3] முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்தார் அதிதி, பின்னர் செந்தில் நாதன் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரை நடிக்க ஒப்புக் கொள்ளவைத்தார்.[4] இந்த படமானது 42 நாட்கள் கோவா, புதுச்சேரி, ஊட்டி ஆகிய இடங்களில் படம்பிடிக்கப்பட்டது. படத்திற்கு ஏ. ஆர். ரகுமானிடம் இணை இணைப்பாளராகப் பணியாற்றிய பிரேம் குமார் இசையமைக்க, சரவணபாண்டியன் ஒளிப்பதிவு செய்தார். செந்தில் நாதன் இப்படத்தை இயக்கியபோதே ராஜா மாகால் என்ற திகில் படத்திற்கான வேலைகளையும் செய்தார்.[5]
ரகுமான் நடித்து வெற்றியடைந்த துருவங்கள் பதினாறு (2016) படத்தின் வெற்றியைத் தயாரிப்பாளர் இப்படத்திற்காக விளம்பரப்படுத்தினார். 2017 பெப்ரவரியில் பகடி ஆட்டம் வெளியானபிறகு, 2017 மார்ச்சில் ஒரு முகத்திரை படத்தை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.[6] மேலும், துருவங்கள் பதினாறுவின் தெலுங்குப் பதிப்பான D16 இன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று உரிமையை விநியோகிப்பாளர் டி. வெங்கடேஷ் 2017 மார்ச் மாதம் வாங்கினார்.[7] மலேசியாவில் படத்தின் வெளியீட்டின்போது, இந்தத் திரைப்படத்தின் இலாபமானது, நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நிதியளிப்பதற்கு வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
வெளியீடு
திரைப்படமானது 2017 மார்ச் 17 அன்று எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads