ஒற்றைக் குழியம்

From Wikipedia, the free encyclopedia

ஒற்றைக் குழியம்
Remove ads

ஒற்றைக் குழியங்கள் அல்லது ஒற்றை உயிரணுக்கள் அல்லது மோனோசைட்டுகள் (Monocytes) என்று இவை அழைக்கப்படுகின்றது. 14% வெண்குருதியணுக்கள் இவ்வகை சார்ந்தவை. இவை பெரிய வெள்ளையணுக்கள். பாக்டீரியாக்கள், இறந்த செல்கள், செல் துணிக்கைகள் போன்றவற்றை அழித்துவிடும் தன்மையுடையவை. உடல் தொற்றுநோயால் தாக்கப்படும் வேளைகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

Thumb
குருதிப் பூச்சு ஒன்றை ஒளி நுணுக்குக்க்காட்டி ஊடாக அவதானிக்கையில் (40x) உருப்பெருக்கத்தில் தெரியும் ஒற்றை உயிரணுவின் தோற்றம். இது செங்குருதியணுக்களால் சூழப்பட்டுள்ளது
Remove ads

கட்டமைப்பு

ஒற்றைக் குழியங்கள் அமீபா போன்ற வடிவத்தையும் மணியுருவான குழியவுருவையும் கொண்டவை.[1] ஒற்றைச் சோணைக் கருவைக் கொண்ட ஒற்றைக் கருவைக் கொண்ட வெண்குருதிக் கலங்கள் அசுரோநாடி மணியுருக்களைக் கொண்டு காணப்படும். ஒற்றைக் குழியங்களின் கருவின் உண்மையான வடிவம் நீள்வட்ட வடிவமாகும்.இது உருவவியல் அடிப்படையில் அவரை வித்து வடிவிலானது (சிறுநீரக வடிவம்). ஒற்றைக் குழியங்கள் மனித உடலின் மொத்த வெண்குழியங்களின் எண்ணிக்கையில் 2% முதல் 10% காணப்படுவதுடன் உடலின் நிர்ப்பீடன தொழிற்பாட்டில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்கின்றது.அதன் தொழிற்பாடுகள்: சாதாரண நிலைமைகளில் தின்குழியச் செயற்பாட்டை நிறைவு செய்தல்; தொற்றுள்ளான இழையங்களில் அழற்சி எற்படுவதற்கான அறிகுறுகள் தெரியும் போது 8-12 மணித்தியாலங்களில் இடம் பெயர்தல்; நிர்பீடன செயற்பாடிற்காக கல வேறுபாடு அல்லது தின் குழியத்தக் காட்டுதல். முதிர்ந்த மனிதரில் ஒற்றைக் குழியங்களில் பாதியளவு மண்ணீரலில் சேமிக்கப்படும்.[2]

Remove ads

விருத்தி

ஒற்றைக் குழியங்கள் என்பு மச்சையில் அதன் முன்னோடியான ஒற்றைநிறமிகளில் இருந்து உருவாகும். ஒற்றைக் குழியங்கள் குருதித் தொகுதியில் ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு இருந்த பின்னர் தின்குழியங்களாக அல்லது கிளை பிரியும் கலங்களாக மாற்றமுற்று இழையங்களுக்குள் பரவும். முதிர்ந்த மனிதரில் ஒற்றைக் குழியங்களில் பாதியளவு மண்ணீரலில் சேமிக்கப்படும்.[2] மேலும், ஒற்றைக் குழியங்கள் குருதியில் காணப்படும் மிகப்பெரிய குருதிக் கலமாகும்.[3]

குருதியில் இருந்து இழையங்களுக்கு இடம் பெயரும் ஒற்றைக் குழியங்கள் தின்குழியங்களக அல்லது கிளைக்கும் கலங்களாக மாற்றமடையும். தின்குழியங்கள் புறப்பொருட்களில் இருந்து இழையங்களைப் பாதுகாக்கும்.

உப குடித்தொகை

மனிதக் குருதியில் மூன்று வகையான ஒற்றைக் குழியங்கள் காணப்படுகின்றன:[4]

  1. வகைமாதிரி ஒற்றைக் குழியம்- இதன் இயல்பு CD14 கல மேற்பரப்பு வாங்கிக்கு உயர் வெளிப்பாட்டைக்கொண்டிருத்தல் (CD14++ CD16 ஒற்றைக் குழியம்)
  2. வகைமாதிரியற்ற ஒற்றைக் குழியம்- இதன் இயல்பு CD14 கல மேற்பரப்பு வாங்கிக்கு குறைந்த வெளிப்பாட்டைக்கொண்டிருத்தலுடன் CD16 வாங்கிக்கு மேலதிக துணை வெளிப்பாட்டைக் காட்டுதல் (CD14+CD16++ monocyte).[5]
  3. இடைத்தர ஒற்றைக் குழியம்: CD14 கல மேற்பரப்பு வாங்கிக்கு உயர் வெளிப்பாட்டைக் கொண்டிருத்தலுடன் CD16 வாங்கிக்கு குறைந்த வெளிப்படுத்துகை (CD14++CD16+ ஒற்றைக் குழியம்).

மனிதர்களில் CD14 வெளிப்படுத்துகை வகைமாதிரியற்ற ஒற்றைக் குழியம்,இடைத்தர ஒற்றைக் குழியம் என்பவற்றை வேறுபடுத்தப் பயன்படும்.[6]

Remove ads

தொழிற்பாடுகள்

ஒற்றைக் குழியங்கள் மற்றும் அவற்றின் தின்குழியக்களும் கிளைக்கும் கலங்களுமான முன்னொடிகள் நிர்ப்பீடனத் தொகுதியில் மூன்று முக்கிய செயல்பாடுகளைச் செய்கின்றன. இவை விழுங்கி அழித்தல், சுரப்புகள் மூலம் அழித்தல் மற்றும் கலச்சாறின் உற்பத்தி. தின்குழியம் என்பது நுண்ணுயிர் மற்றும் துகள்களின் உட்செலுத்தல் செயல் ஆகும்.

மொனொசைற்றொபீனியா

வெண்குருதியணுக்களின் ஒரு வகையான ஒற்றைக் குழியங்கள் எண்ணிக்கையில் குறைவுபடுதல் இந் நோயாகும். நிர்ப்பீடன முறையில் குறைக்கப்பட்ட குளுக்கோட்டிகொயிட்ஸ் மருத்துவத்தின் பின் கலங்களில் ஒற்றைக் குழியங்களின் எண்ணிக்கை குறைவுபடல் காணப்பட்டது[7] சில நோய் நிலைமைகளாலும் இத்தகைய கோளாறுகள் ஏற்படுகின்றன.

மருத்துவ முக்கியத்துவம்

Thumb
வருடலிலத்திரன் நுணுக்குக் காட்டி ஊடாக தோன்றும் மனித குருதியின் படிமம்

ஒற்றைக் குழியங்களின் எண்ணிக்கை ஒரு முழுமையான குருதி கணிப்பின் ஒரு பகுதி ஆகும். இது மொத்த வெண் குழியங்களின் நூற்றுவீதமாகவோ அல்ல்து நேரடி எண்ணிக்கையாகவோ கணக்கிடப்படலாம். இந்த கணிப்பீடுகள் ஒற்றைக் குழியங்களின் உப கூறுகள் தீர்மானமாகத் தெரிந்தால் பயனுள்ளவையாக இருக்கும்.

மொனொசைடோசிஸ்

மொனொசைடோசிஸ் எனப்படுவது சுற்றோட்டக் குருதியில் ஒற்றைக் குழியங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகும்.இது பல்வேறு நோய் நிலைமைகளின் காரணமாக ஏற்படலாம். பின்வருன் செயற்பாடுகள் ஒற்றைக் குழியங்களின் எண்ணிக்கைய அதிகரிக்கும்:

  • நட்பட்ட அழற்சி
  • அழுத்தங்களுக்கான எதிர்வினைகள்[8]
  • நிர்ப்பீடனத்தால் தொடர்புபடுத்தப்படும் நோய்கள்
  • தமனித் தடுப்பு[9]
  • திசு இறப்பு
  • செங்குருதிக் கலங்க்ளின் புத்தாக்கம்
  • தீனுண்ம காய்ச்சல்
  • திசுமணிக் கழலை

CD14+CD16++ ஒற்றைக் குழியங்களின் அதி கூடிய எண்ணிக்கை கடுமையான தொற்று நிலைமைகளில் அதிகம் அதிகரித்துக் காணாப்படும்.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads