ஒலீயம்

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

ஒலீயம்
Remove ads

ஒலீயம் அல்லது புகையும் கந்தக அமிலம் (Oleum or Fuming Sulfuric Acid) என்பது வெவ்வேறு இயைபுகளில் கந்தக டிரையாக்ஸைடு மற்றும் கந்தக அமிலம் கலந்த கரைசல்களைக் குறிக்கும். சில நேரங்களில் மிகவும் குறிப்பாக, அல்லது டை சல்பூரிக் அமிலம் (பைரோசல்பூரிக் அமிலம் என்றும் அழைக்கப்பட்டது). ஓலியம் என்ற சிஏசு எண் 8014-95-7 மூலம் அடையாளம் காணப்படுகிறது.

Thumb
காற்றில் புகையும் ஒலீயம்

ஒலீயத்தை ySO3.H2O என்ற வாய்ப்பாட்டால் குறிக்கலாம். y என்பது கந்தக டிரையாக்சைடின் உள்ளடக்கத்தின் மொத்த மோலார் நிறையாகும். வெவ்வேறு ஒலீயங்களை சேர்க்க, y இன் மதிப்பு மாறுபடும். H2SO4.xSO3 என்ற வாய்ப்பாட்டாலும் இதைக் குறிக்க முடியும். இங்க x இப்போது தனித்த கந்தக டிரையாக்சைடின் மோலார் உள்ளடக்கம் என வரையறுக்கப்படுகிறது. ஒலீயம் பொதுவாக நிறையினடிப்படையில் தனித்த SO3 உள்ளடக்கத்தின் படி மதிப்பிடப்படுகிறது. இது கந்தக அமிலத்தின் வலிமையின் சதவீதமாகவும் வெளிப்படுத்தப்படலாம்; ஒலீயம் செறிவுகளுக்கு, அது 100% க்கும் அதிகமாக இருக்கும்.

Remove ads

உற்பத்தி

தொடுகைச் செயல்முறையின் மூலம் ஒலீயம் உற்பத்தி செய்யப்படுகிறது, அங்கு கந்தகமானது, கந்தக டிரையாக்சைடாக ஆக்சிஜனேற்றம் செய்யப்படுகிறது, பின்னர் இது செறிவூட்டப்பட்ட சல்பூரிக் அமிலத்தில் கரைக்கப்படுகிறது. சல்பூரிக் அமிலம் ஒலீயத்தின் ஒரு பகுதியை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் மீண்டும் உருவாக்கப்படுகிறது.

ஈயத்தின் அரிப்பு மற்றும் NO2 வாயுவை உறிஞ்சும் தன்மை ஆகியவற்றின் காரணமாக கந்தக டிரையாக்சைடு அல்லது செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தை நேரடியாக உற்பத்தி செய்ய முடியாததால் கந்தக அமில உற்பத்திக்கான ஈய அறை செயல்முறை பகுதியளவு கைவிடப்பட்டது. தொடர்பு செயல்முறையால் இந்த செயல்முறை வழக்கற்றுப் போகும் வரை, மறைமுகமான முறைகள் மூலம் ஒலீயம் பெறப்பட வேண்டியிருந்தது. வரலாற்று ரீதியாக, ஒலீயத்தின் மிகப்பெரும் உற்பத்தியானது  நார்தெளசெனில் உள்ள இரும்பு சல்பேட்டுகளின் வாலைவடித்தலிருந்து தயாரிக்கப்பட்டதேயாகும். இதனால் தான்  நார்தெளன் சல்பூரிக் அமிலம் என்ற வரலாற்றுப் பெயர் ஏற்பட்டது.

Remove ads

பயன்பாடுகள்

கந்தக அமில உற்பத்தி

நீரேற்றத்தின் உயர் வெப்ப அடக்கத்தின் காரணமாக கந்தக அமிலத்தை தயாரிப்பதில் ஒலீயம் ஒரு முக்கியமான இடைநிலைப்பொருள் ஆகும். SO 3 நீரில் சேர்க்கப்படும்போது, கரைவதை விட, கையாள்வதற்குக் கடினமான கந்தக அமிலத்தின் நுண்ணிய புகைப்படலத்தை உருவாக்குகிறது. இருப்பினும், செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தில் சேர்க்கப்பட்ட SO3 உடனடியாகக் கரைந்து, ஒலீயத்தை உருவாக்கி, பின்னர் தண்ணீரில் நீர்க்கப்பட்டு கூடுதல் செறிவூட்டப்பட்ட சல்பூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. [1]

கரிம வேதியியல் ஆய்வு

ஒலீயம் ஒரு கடுமையான வினைக்காரணியாகும். மேலும் இது மிகவும் அதிக அரிக்கும் தன்மை கொண்டதுமாகும். ஒலீயத்தின் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று நைட்ரோபென்சீனின் இரண்டாம் நிலை நைட்ரோ ஏற்றமாகும். முதல் நைட்ரோ ஏற்றமானது கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியவற்றால் நிகழக்கூடும், ஆனால், இது வளையத்தை எதிர்மின்னி கவர் பதிலீட்டு வினைகளிலிருந்து பின்னோக்கச் செய்கிறது. இன்னும் வலிமையான வினைக்காரணியான ஒலீயம் அரோமேடிக் வளையத்தில் மற்றுமொரு நைட்ரோ தொகுதியை சேர்ப்பதற்கு தேவைப்படுகிறது.

Remove ads

வினைகள்

அடர் கந்தக அமிலம் போல, ஒலீயமும் ஒரு வலிமையான நீர்நீக்கக் காரணி ஆகும். இது எந்த ஒரு சர்க்கரை அல்லது தூளாக்கப்பட்ட குளுக்கோசின் மீதும் ஊற்றும் போது ஒரு வெப்ப உமிழ் வினையை நிகழ்த்தி சர்க்கரையில் உள்ள நீரை முற்றிலுமாக உறிஞ்சிக்கொண்டு வெற்று கரியை விட்டுச் செல்கிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads