ஒளிச்சேர்க்கை நிறமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒளிச்சேர்க்கை நிறமி ( photosynthetic pigment) (துணை நிறமி; பசுங்கணிக நிறமி; உணர்கொம்பு நிறமி) என்பது ஓர் உயிரியல் நிறமி ஆகும். இது பசுங்கணிகங்களிலும் குச்சுயிரிகளிலும் காணப்படும் நிறமி. இது ஒளிச்சேர்க்கைக்கு தேவையான ஒளி ஆற்றலை உட்கவர்கிறது.

மின்காந்தக் கதிர்நிரல், அலைநீளங்கள், மீட்டரில்
ஒளிச்சேர்க்கை நிறமிகள் பட்டியல் ( உயரும் முனைமையுடன்):
- கரோட்டீன்: ஓர் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறமி
- மஞ்சையம்: ஒரு மஞ்சள் நிறமி
- பழுப்புப் பாசி நிறமி a:[1] ஒரு சாம்பல்-பழுப்பு நிறமி
- பழுப்புப் பாசி நிறமி b:[1] ஒரு மஞ்சள்-பழுப்பு நிறமி
- பச்சையம் a: ஒரு நீலப் பச்சை நிறமி
- பச்சையம் b: ஒரு மஞ்சட்பச்சை நிறமி
ஆறு நிறமிகளில் பச்சையம் a மிகவும் பரவலாக அமைகிறது; ஒளிச்சேர்க்கை நிகழும் ஒவ்வொரு தாவரத்திலும் இது இருக்கும். ஒவ்வொரு நிறமியும் மின்காந்தக் கதிர்நிரலின் வெவ்வேறு பகுதிகளில் ஒளியைத் திறம்பட உட்கவர்கின்றன. பச்சையம் a 400–450 nm நெடுக்கத்திலும் 650–700 nm நெடுக்கத்திலும் நன்கு உட்கவர்கிறது; பச்சையம் b 450–500 nm நெடுக்கத்திலும் 600–650 nm நெடுக்கத்திலும் நன்கு உட்கவர்கிறது. மஞ்சையம் 400–530 nm நெடுக்கத்தில் நன்கு உட்கவர்கிறது. என்றாலும் எந்த நிறமியும் மஞ்சட்பசும் பகுதியில் திறம்பட ஒலியை உட்கவர்வதில்லை; உட்கவரப்படாத பச்சை ஒளியின் விரவலின் எதிரொளிர்வே இயற்கையில் நாம்காணும் பசுமைக்குப் பொறுப்பாகிறது .
Remove ads
குச்சுயிரி
தாவரங்களைப் போலவே, நீலப்பசும் குச்சுயிரிகள்(சயனோபாக்டீரியாக்கள்) தண்ணீரை ஒளிச்சேர்க்கைக்கு மின்னன்(எலக்ட்ரான்) கொடுப்பியாகப் பயன்படுத்துகின்றன, எனவே உயிர்கத்தை(ஆக்சிஜனை) விடுவிக்கின்றன; இவை நிறமியாகப் பச்சையத்தைப் பயன்படுத்துகின்றன. கூடுதலாக, பெரும்பாலான நீலப்பசும் குச்சுயிரிகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகும். மேலும், பெரும்பாலான நீலப்பசும் குச்சுயிரிகள், பசுங்கணிகத்தின் கலக்கணிகத்தில் தோன்றும் நீரில் கரையக்கூடிய பைக்கொபிலிப் புரதங்களை நிறமியாக ஒளியை உட்கவர்ந்து அதை பச்சையத்துக்குக் கடத்துகிறது. (சில நீலப்பசும் குச்சுயிரிகள்(குறிப்பாக முற்பசுந் தாவரங்கள்) பைக்கோபிலினுக்குப் பதிலாகப் பச்சையம் b ஐப் பயன்படுத்துகின்றன.) தாவரங்களிலும் பாசிகளிலும் உள்ள பசுங்கணிகங்கள் அனைத்துமே நீலப்பசும் குச்சுயிரிகளிலிருந்து உருவாகின என்று கருதப்படுகிறது.
பல பிற குச்சுயிரிக் குழுக்கள் குச்சுயிரிப் பச்சைய நிறமியை( இது தாவரப் பச்சையத்தினை ஒத்தது) ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்துகின்றன. நீலப்பசும் குச்சுயிரிகளை போலல்லாமல், இந்தக் குச்சுயிரிகள் உயிரகத்தை வெளியிடுவதில்லை. மாறாக, இவை நீருக்குப் பதிலாக நீரகக் கந்தகியை( ஐதரசன் சல்பைடு) மின்னன் கொடுப்பியாகப் பயன்படுத்துகின்றன.
அண்மையில், கடல்வாழ் காம்மா வகை முதனிலைக் குச்சுயிரிகளில் மிகவும் வேறுபட்ட புரோட்டியோகோடாப்சின் எனும் நிறமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பாக்ட்டீரியார்கோடாப்சின் ஒத்தமைகிறது. இதில் இருந்தே புரோட்டியோகாடாப்சின் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.
Remove ads
பாசி
பசும்பாசி, செம்பாசி கிளாசோபாயிடுகள் ஆகியன எல்லாமும் பச்சையங்களைப் பயன்படுத்துகின்றன. செம்பாசியும் கிளாசோபாயிடுகளும் பைக்கோபிளின்பிரைட்டின்களைப் பயன்படுத்துகின்றன, ஆனால் பச்சை பாசிகள் பச்சையத்தைப் பயன்படுதுகின்றன.
தொல்லுயிரி
காண்க, தொல்லுயிரி
காலோக்குச்சுயிரி, பாக்டீரியார்கோடாப்சின் எனும் நிறமியைப் பயன்படுத்துகிறது. இது ஒளிக்கு ஆட்படும்போது முன்மி எக்கி(புரோட்டான் பம்ப்)யாகச் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads