ஒளிப்படவியல்

From Wikipedia, the free encyclopedia

ஒளிப்படவியல்
Remove ads

ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைடை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், கல்வி, பதிவுத்துறை அலுவலகங்கள், பத்திரிகைத் துறை, பல் ஊடக கருத்துத் தொகுப்புகள், திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.

விரைவான உண்மைகள் ஒளிப்படவியல், பிற பெயர்கள் ...
Remove ads

சொல்லிலக்கணம்

Thumb
நேர்மறை வடிவில், பின்னல்வகை ஜன்னல். இடம்: லகாக் அபே, இங்கிலாந்து (Lacock Abbey, England) ஆண்டு: 1835 புகைப்படம்: வில்லியம் பாக்ஸ் டால்போட் (William Fox Talbot) இது ஒளிப்படக் கருவியில் செய்யப்பட்ட பழமையான புகைப்பட எதிர்மறையாக இருக்கலாம்.

ஒளிப்படவியல் எனும் ஆங்கிலப் பதம் கிரேக்கச் சொல்லான φωτός (phōtos), φῶς இன் ஆறாம் வேற்றுமை (phōs), "ஒளி"[1] மற்றும் γραφή (graphé) "கோடுகளால் சுட்டிக்காட்டல்" அல்லது "வரைதல்",[2] ஆகியவற்றின் கருத்தைக் கொண்ட "ஒளியினால் வரைதல்" என்பதிலிருந்து உருவாகியது.[3]

பிரேசில் (Brazil) நாட்டின், கேம்பினாஸ் (Campinas) பகுதியில் வசித்த ஹெர்குலஸ் புளோரன்ஸ் (Hercules Florence) ஒரு பிரஞ்சு ஓவியரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் பிரஞ்சு மொழி வடிவச் சொல், போட்டோகிராபி (photographie) என்பதைத் தன் தனிக்குறிப்பேட்டில் பயன்படுத்திருந்தார். இது 1834ல் எழுதப்பட்டதாக பிரேசிலிய வரலாற்றாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.[4] ஜோஹன் வோன் மேட்லர் (Johann von Maedler), பெர்லின் (Berlin) நாட்டின் வானியலாளர். இவர் 1839ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் வோஸ்ஸிசே ஸீய்டங் (Vossische Zeitung) எனும் ஜெர்மன் செய்தித்தாளில் ஒளிப்படவியல் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்காக இவர் 1932ல் நடைபெற்ற ஜெர்மன் புகைப்பட வரலாற்றரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டார்.[5]

Remove ads

வரலாறு

Thumb
ஆரம்ப காலத்தில் அறியப்பட்ட எதிரொளிப்பு அடையாளச் செய்தி வேலைப்பாட்டுடன் அச்சடிக்கப்பட்ட உலோக தகடு. 1825இல், நைஸ்போரெ நைப்ஸ் (Nicéphore Niépce) உருவாக்கியது.[6] உலோகத் தகட்டில் செதுக்கிய சித்திரம் புகைப்பட முறையில் படியெடுக்கப்பட்டது. இதுவே ஒளிப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட நிரந்தர புகைப்படத்தை நோக்கிய முதல் படி.

புகைப்படக்கலை என்பது பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு விளைவாகும்.

  • மோஹிஸ்ட் (Mohist) தருக்கப் பள்ளியைச் சார்ந்த பண்டைய ஹான் (Han) சீன தத்துவஞானி மோ டி (Mo Di), முதலில் ஒளியியல், அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி, ஊசித் துளை ஒளிப்படக் கருவி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் கொள்கைகளைக் கண்டறிந்து, விளக்கியவர் மற்றும் விரிவாக்கியவர். பின்னர் கி.மு. 5 வது மற்றும் 4 வது நூற்றாண்டுகளில், கிரேக்க கணிதவியலாளர்கள் அரிஸ்டாட்டில் (Aristotle), யுக்ளிட் (Euclid), ஆகியோர் தன்னிச்சையாக ஒரு ஊசித் துளை ஒளிப்படக் கருவியைப் பற்றி விவரித்தனர்.[7][8]
  • 6 வது நூற்றாண்டில், ட்ரால்லஸ் (Tralles) பகுதியின் பைசாண்டைன் (Byzantine) கணித ஆய்வாளர், ஆந்தமியஸ் (Anthemius) மேற்கொண்ட ஆய்வுகளில் ஒளிப்படக் கருவி அப்ஸ்கியுராவைப் பயன்படுத்தினார்.[9]
  • ஹான் சீனப் பல்துறை வல்லுநர் ஷென் குயோ (Shen Kuo) (1031–95) ஒளிப்படக் கருவி அப்ஸ்கியுராவைக் கண்டுபிடித்தார்.
  • Thumb
    லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழிக் காட்சி -நைப்ஸ் (Niépce) 1826 /1827 முற்கால ஒளிப்படக் கருவிப் புகைப்படம்
  • அரபு இயற்பியலாளர், இபின் அல்-ஹய்தம் அல்ஹஸன் (Ibn al-Haytham Alhazen) (965-1040) ஊசித் துளை ஒளிப்படக் கருவியைக் கண்டுபிடித்தார்.[8][10]
  • ஆல்பர்டஸ் மேக்னஸ் (Albertus Magnus) (1193–1280) வெள்ளி நைட்ரேட்டைக் கண்டுபிடித்தார்.[11]
  • ஜியார்க் ஃபாப்ரிசியஸ் (Georg Fabricius) (1516–71) வெள்ளி குளோரைடைக் கண்டுபிடித்தார்.[12]
  • 'கட்டுரைகளின் கனவுத் தொகுப்பு' எனும் புத்தகத்தில், ஷென் குயோ 'ஒளிப்படக் கருவி அப்ஸ்கியுராவில்' பயன்படுத்தப்பட்டுள்ள அறிவியல் கோட்பாடுகளையும், தொழில்நுட்பங்களையும், ஒளி-இயற்பியல் கூறுகளையும் விளக்கியுள்ளார்.
  • இபின் அல்-ஹய்தம் எழுதிய 'ஒளியியல்' என்னும் புத்தகத்தில், இடைக்கால பொருள்களைப் பழமையான புகைப்படங்களைக் கொண்டு விவரித்தார்.[13][14][15]
  • 1566 இல் டேனியல் பார்பாரோ (Daniele Barbaro) ஒளிப்படக் கருவியில் பயன்படுத்தப்படும், இடைத் தகடு எனும் இடைத்திரை பற்றி விவரித்தார்.
  •  1694 இல் வில்ஹெல்ம் ஹாம்பெர்க் (Wilhelm Homberg) சில வேதிப் பொருட்கள் ஒளியினால் எவ்வாறு கருமையாகின்றன (ஒளி வேதி விளைவு) என்று விவரித்தார்.[16]
  • அறிவியல் புனைவு நூலான கிபான்டியை (Giphantie), பிரஞ்சு புதின எழுத்தாளர் திபாய்க்னெ டி லா ரோஷே (Tiphaigne de la Roche), 1760 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூலில் ஒளிப்படவியல் குறித்துத் தெளிவான பொருள் மற்றும் அதன் பயன்பாட்டு விளக்குதல் அளித்துள்ளார்.
Remove ads

 புகைப்படம் கண்டுபிடிப்பு

சுமார் 1800 ஆண்டுகளில் பிரித்தானிய கண்டுபிடிப்பாளர், தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளைத் தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி புகைப்படம் தயாரித்தார்.

நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இம்முறையில் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களைப் பதிவு செய்தார். இது 1802 இல் உலகிற்கு முழுமையாகவும், தெளிவாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர், நிழல் படங்கள் குறிப்பிட்ட காலம் கழித்து இறுதியில் முழுமையாகக் கருமையடைந்தது அறியப்பட்டது.[17] நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழியாக இயற்கைச் சூழலைப் புகைப்படமாக்கினார். இதுவே தற்போது இருக்கும் முற்கால புகைப்படம் ஆகும். இதில் இயற்கைக் காட்சியானது அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவியின் லென்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது.[18]

டால்போட், ஒளிகசியும் எதிர்மறையை உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன புகைப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகளை அச்சிட காட்சியை மீள்புகைப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும்.[19] 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் ஒளிப்படக் கருவி மூலம் பல புகைப்படங்களைப் பதிவு செய்தார். இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில் (Lacock Abbey) ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளின் எதிர்மறைகளில், இது மிகப்பழமையான ஒளிப்படக் கருவியின் எதிர்மறையாக இருக்கலாம்.[20][21]

ஒளிப்பட நுட்பங்கள்

ஒளிப்படத்திற்கான காட்சிகளைப் பதிவு செய்வதில் பல்வேறு வகையான ஒளிப்பட நுட்பங்களும், ஊடகங்களும், படப்பதிவு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒளிப்படக் காட்சிகளைப் பதிவு செய்வதில் பங்கேற்கும் பல்வேறு கூறுகள்:

  • ஒளிப்படக் கருவி
  • திட்பக்காட்சிக் கருவியமைவு முறை (stereoscopy)
  • இரட்டை ஒளிப்படமிகள்
  • முழு நிரல் அலைக்கற்றை (full-spectrum)
  • புறவூதா ஊடகம் (ultraviolet media)
  • அகச்சிவப்பு ஊடகம் (infrared media)
  • எளிய கணிணியியல் ஒளிப்படப் பதிவு மற்றும்
  • பிற காட்சிப் பதிவு நுட்பங்கள்

முப்பரிமாணப் படிமம்

ஒரே வண்ணம் அல்லது பல வண்ண புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்டு, பிரதியிட்ட படங்களைப் பக்கம், பக்கமாக வைத்துப் பார்க்கும்போது, பிரதியிடப்பட்ட ஒரே மாதிரியான இரண்டு படங்களின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று ஈடாகப் போட்டியிட்டு மனிதப் பார்வைக்கு முப்பரிமாண வடிவம் போலத் தோற்றமளிக்கும். இம்முப்பரிமாணப் படிம ஒளிப்படப் பதிவானது, பிற்காலத்தில் இயக்கத்துடன் கூடிய சலனப் படங்கள் பதிவு செய்வதற்கு முன்னோடியாக அமைந்தது.[22] இது பேச்சுவழக்கில் "3-டி" ஒளிப்படம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மிகவும் துல்லியமான பெயர் முப்பரிமாண ஒளிப்படம் அல்லது ஸ்டீரியோஸ்கோபி (stereoscopy) என்பதாகும். இத்தகைய ஒளிப்படக் கருவிகள் நீண்ட காலங்களாக நழுவச் சுருள்களையே பயன்படுத்தி வந்தன. மிகச் சமீபகாலமாக முப்பரிமாணப் படிம படப் பதிவில் எணினி மின்னணுவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துடித்திறப் பேசி ஒளிப்படமிகள் மூலமும் இதைச் செய்ய முடியும்.

இரட்டை ஒளிப்படமிகள்

Thumb
ஒரு துடித்திறப் பேசி செயலியைப் பயன்படுத்தி ஒரு இரட்டை ஒளிப்படம் பதியப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், நேர் எதிர்த் திசைகளில், இரண்டு ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு இருபுறத்தில் இருந்தும் ஒரே காட்சியை படப்பதிவு செய்வது இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு எனப்படும். இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு முறையில், ஒரே நேரத்தில் காட்சிப் பொருள் மற்றும் ஒளிப்பதிவாளர் என இரு திசைகளிலும் அல்லது ஒரே நேரத்தில் ஒரு புவியியல் அமைப்பில் இருபுறமும் இரட்டை ஒளிப்பதிவு செய்ய இயலும். இதனால் ஒரு தனிப் படத்தில் மற்றொரு துணை கதை அடுக்கு சேர்த்து காட்சியை முழுமைப்படுத்த முடியும்.[23]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads