தூரமானி

From Wikipedia, the free encyclopedia

தூரமானி
Remove ads

தூரமானி (odometer, ஓடோமீட்டர் அல்லது odograph)[1][2] என்பது வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவி ஆகும். பண்டைய கிரேக்க மொழியில் hodós என்பது "பாதையைக்" குறிக்கும் சொல்லாகும். பிரித்தானிய அலகுகளைப் பயன்படுத்தும் நாடுகளில் இது மைலோமீட்டர் (mileometer, அல்லது milometer) எனவும் அழைக்கப்படுகிறது. இக்கருவியானது எந்திரவியல் மூலமாகவோ, மின்னணுவியல் மூலமாகவோ, அல்லது இரண்டும் பயன்படுத்தப்பட்டோ தாயாரிக்கப்படுகிறது.

Thumb
எண்ணிம வடிவில் ஓடோமீட்டரைக் காட்டும் கருவி

அனைத்து வகை வாகனங்களிலும் வேகமானியுடன் சேர்ந்தே இக்கருவி பொருத்தப்பட்டிருக்கும். ஒரே இணைப்பின் மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். சில வாகனங்களில் இது பயண மீட்டராகவும் (tripmeter) பொருத்தப் பட்டிருக்கும். பயண மீட்டரில் தேவையான போது தூர அளவை சுழியத்திற்குக் கொண்டு வந்து தனிப்பட்ட பயண தூரத்தையும் கணக்கீட்டு கொள்ளலாம்.[3]

Remove ads

செயல்படும் விதம்

தூரமானியானது, வாகனம் கடந்துள்ள தூரத்தை, அவ்வாகனச் சக்கரத்தின் சுழற்சியின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு காட்டுகிறது. எந்திரவியல் தூரமானியானது பல்சக்கர அமைப்பையும்[4](gear), பல வளையங்களையும் கொண்டு இயங்குகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads