ஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவில்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவில் என்பது திருச்சி மாவட்டம் ஓமாந்தூரில் அமைந்துள்ள கோயிலாகும்.[1] இங்கு மூலவராக ஏகாம்பரேசுவரரும், அம்மனாக அன்னகாமாட்சியும் உள்ளனர்.[2] கொல்லிமலை மாசி பெரியசாமிக்கு இருக்கும் கோயில்களில் இந்தக் கோயிலே மிகப் பெரியதாகும். எனவே இக்கோயில் ஓமாந்தூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த தெய்வங்களோடு தனிச்சந்நிதிகளில் எண்ணற்ற நாட்டர் தெய்வங்களும் உள்ளனர்.
இக்கோயிலில் எந்தக் கடவுளுக்கும் உருவ வழிபாடு இல்லை. அனைவரும் ஒளி வடிவிலேயே காட்சிதருகின்றனர். பைரவர், லாட சன்னியாசி, மாசி கருப்பசாமி, அப்பாச்சியாயி, குப்பாச்சியாயி போன்ற அனைவருமே ஒளி வடிவிலேயே காட்சிதருகின்றனர். இக்கோயிலில் 64 பதிவுகள் உள்ளன.
Remove ads
தல சிறப்பு
- இங்குள்ள அனைத்து தெய்வங்களுக்கும் உருவ வழிபாடு இல்லை. அனைத்தையுமே ஒளிவடிவிலேயே வழிபடுகின்றனர்.
- கொடிக்கம்பத்திற்கு பதிலாக மிகப்பெரிய வேல் வைக்கப்பட்டுள்ளது.
சந்நிதிகள்
- அப்பச்சியாயி
- அன்னகாமாட்சியம்மன்
- ஏகாம்பரேஸ்வரர்
- கரட்டடியான்
- கவுதாரி அம்மன்
- காத்தவராயன்
- குப்பச்சியாயி
- சண்டிகேஸ்வரர்
- தேவராய சாமி
- நல்லேந்திர சாமி
- பச்சாயி அம்மன்
- பச்சைநாச்சி அம்மன்
- புதுகருப்பு சாமி
- பெரியண்ண சாமி
- பைரவர்
- மதுரைவீரன்
- மாசி கருப்பண்ணசாமி
- முனீஸ்வரன்
- லாடப்ப சன்னாசி
- ஜலகண்டேசுவரர்
- செட்டியப்பன்
- புரவியப்பன்
- நாற்பத்தொன்றாயிரம் ரிஷிகள்
- முப்பத்துமுக்கோடி தேவர்கள்
- தென்கைலாசம்
- ஓமரிஷி
ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.
Remove ads
திருவிழாக்கள்
- தமிழ் வருடப்பிறப்பு
- ஆங்கில வருடப்பிறப்பு
- ஆடி 18, ஆடி 28
- மகாசிவராத்திரி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads