ஔரையா மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஔரையா மாவட்டம்
Remove ads

ஔரையா மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ஔரையா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

வரலாறு

17 செப்டம்பர் 1997 அன்று ஔரையா மற்றும் பிதுனா வட்டங்கள் ஏட்டாவா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய ஔரையா மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பொருளாதாரம்

திபயாபூர் ஆனது இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தொழில் நகரம் ஆகும். இங்கு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசியின் 663 MW மின்நிலையம்,[2] பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலை மற்றும் கெய்ல் நிறுவனத்தின் எரிவாயு அமுக்கி நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.[3]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஔரையா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,372,287.[4] இது தோராயமாக சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 357வது இடத்தில் உள்ளது.[4] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 681 inhabitants per square kilometre (1,760/sq mi).[4] மேலும் ஔரையா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.3%.[4]ஔரையா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 864 பெண்கள் உள்ளனர்.[4] மேலும் ஔரையா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 80.25%.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads