கஃப் விட்லம்

From Wikipedia, the free encyclopedia

கஃப் விட்லம்
Remove ads

எட்வேர்ட் கஃப் விட்லம் (Edward Gough Whitlam, சூலை 11, 1916 - அக்டோபர் 21, 2014) ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியும், அதன் 21வது பிரதமரும் ஆவார். ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் நாடாளுமன்றத்துக்குத் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் தொழிற் கட்சியின் உதவித் தலைவரான விட்லம், 1967 ஆம் ஆண்டில் அதன் தலைவரானார். அப்போது அவரது கட்சி எதிரணியில் இருந்தது.

விரைவான உண்மைகள் கஃப் விட்லம்Gough Whitlam, ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் தேர்தல்கள்: 1969, 1972, 1974, 1975, 1977 ...

1969 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சி தோல்வ்வியடைந்தது. எனினும் விட்லமின் தலைமையில் 1972 தேர்தலில் 23 ஆண்டுகளின் பின்னர் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 1975 ஆம் ஆண்டில் எழுந்த அரசியலமைப்புப் பிரச்சினையை அடுத்து ஆஸ்திரேலிய பொது-ஆளுநர் ஜோன் கேர் இவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். அரசு கொண்டுவந்த சட்டமூலம் ஒன்றை செனட் அவைக்கு வாக்கெடுப்புக்கு விடுவதற்கு எதிர்க்கட்சியாக இருந்த ஆஸ்திரேலிய லிபரல் கட்சி தடுத்ததை அடுத்து, ஆளுநர் விட்லமை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்தது. ஆளுநர் ஒருவரினால் அவரது சிறப்பு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரேயொரு பிரதமர் இவரே ஆவார்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads