கதிரவ மறைப்பு

From Wikipedia, the free encyclopedia

கதிரவ மறைப்பு
Remove ads

கதிரவ மறைப்பு அல்லது சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவனுக்கும் புவிக்கும் இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே புதுநிலவு நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது.[1] கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி, வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன. இக்கதிரவ மறைப்பு அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.

Thumb
11 ஆகஸ்ட், 1999ல் ஏற்பட்ட முழுமையான கதிரவ மறைப்பு- இதில் பதுநிலவு நிறமண்டலம் (சிவப்பு) மற்றும் கொரோனா ஆகிய மூன்றும் தெரிகிறது.
Thumb
முழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).
Thumb
அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து

நிலவு புவியைச் சுற்றும் வட்டணை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே கதிரவ மறைப்பு நாளைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை.

கதிரவ மறைப்பின்போது நிலவின் நிழல் புவியின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து கதிரவ மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.[2]

கதிரவனை நேரடியாகக் காண்பது கண்களுக்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பை உச்ச நிலையை மட்டும் வெறும் கண்களால் காண இயலும். அதற்கு முன்பு அதன் உச்ச நிலை நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகும்.

Remove ads

வகைகள்

கதிரவ மறைப்பில் நான்கு வகைகள் உள்ளன. அவை:

  • முழுக் கதிரவ மறைப்பு- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும்போது ஏற்படுகிறது.இந்நிகழ்வின் போது கதிரவன் முழுமையாக மறைக்கப்படும்.
  • வலயக் கதிரவ மறைப்பு- நிலவின் எதிர்நிழல் புவியின் மீீது பதியும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவனின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வலயம் போன்று காட்சியளிக்கும்.
  • கலப்புக் கதிரவ மறைப்பு- இவ்வகை மறைப்பு புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலயக் கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
  • பகுதிக் கதிரவ மறைப்பு- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்படும்.
Remove ads

நேரம்

முழுக் கதிரவ மறைப்பில் பின்வரும் இறங்குமுக வரிசைக் கட்டங்கள் அமைகின்றன.[3]

  1. நிலா புவியண்மைக்கு மிகச் சரியாக வருதல் ( இந்நிலையில் இதன் கோண விட்டம் கூடியவறை பரியதாக அமையும்).
  2. புவி சூரிய நீள்வட்ட வடிவ வட்டணைக்கு மிகத் தொலைவில் கதிரவச் சேய்மைக்கு மிக அருகில் அமையும்.
  3. கதிரவ மறைப்பின் நடுப்புள்ளி, புவி நடுவரைக்கு மிக அணுக்கமாக அமையும். இந்நிலையில், புவிச் சுழற்சி வேகம் ப்ருமமாக இருக்கும்; இந்த வேகம் புவி மேபரப்பில் நகரும் நிலா நிழலின் வேகத்துக்கு நெருக்கமாக இருக்கும்.
  4. கதிரவ மறைப்பின் நடுப்புள்ளியில் அமையும் கதிரவ மறைப்பு நெறியன்(திசையன்) புவிச் சுழற்சித் திசைவைப்பில் அமைகிறது (அதாவது விட்டத்தில் அமையாத கிழக்காக அமையும்).
  5. கதிரவ மறைப்பின் நடுப்புள்ளி, துணைச் சூரியப் புள்லிக்கு நெருக்கமாக அமையும் ( புவி சூரியனுக்கு நெருக்கமாக வரும் பகுதி).

மிக நீண்ட நேர கதிரவ மறைப்பாக, 2186, சூலை 16, கதிரவ மறைப்பு 7 மணித்துளிகள், 29 நொடிகள் பெரும நேரத்துக்கு வடகயானாவில் தெரியும்.

Remove ads

நிகழ்வுகள்

உச்சக்கட்டம்

முழுமையான கதிரவ மறைப்பின் உச்சக்கட்டத்தின் போது புவியில் விழும் கதிரவ ஒளிக்கோளத்தின் பகுதி நிலவால் மறைக்கபடுகிறது. எனவே அப்போது கருவட்டமாகத் தெரியும் புதுநிலவையும் அதன் விளிம்பில் சிவப்புத் திட்டுக்கள் போன்று தெரியும் நிறமண்டலத்தையும் அதைச் சுற்றி மங்கலான வெள்ளை நிறத்தில் தெரியும் கொரோனாவும் வெறும் கண்களால் காண இயலும்.

Thumb
முழுமையான கதிரவ மறைப்பு முடிவுறும் தருவாயில் ஏற்படும் வைர மோதிர நிகழ்வு.

வைர மோதிர நிகழ்வு

முழுக் கதிரவ மறைப்பு, வலயக் கதிரவ மறைப்பு ஆகியவற்றின் உச்சக் கட்டம் தொடங்கும் போதும் முடிவுறும் போதும் வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.

அண்மைய, வரவிருக்கும் கதிரவ மறைப்புகள்

5-6 சனவரி 2019- பகுதி கதிரவ மறைப்பும் 26 திசம்பர் 2019 கதிரவ மறைப்பும் ஐரோப்பாவிலும் ஆசியாவின் பெரும் பகுதிகளிலும் தெரிந்தன.

Thumb
2021 முதல் 2040 வரையிலான முழு, கலப்புக் கதிரவ மறைப்புகளின் தடவழி.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads