கசகான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசகான் (இறப்பு 1358) என்பவர் கரவுனாசின் (1345 - 1358) ஒரு துருக்கிய[1] அமீர் ஆவார். சகதாயி உளூசின் (நாடு) மீது ஆதிக்கம் செலுத்திய ஆட்சியாளரும் ஆவார்.
கசகானின் முன்னோர்கள் பற்றித் தெரியவில்லை; முன்னோர்களின் பெயரைக் கொண்டு பதவிக்கு வராமல், நியமிக்கப்பட்டதன் மூலம் இவர் கரவுனாசின் தலைமைப் பதவியை ஏற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[2] 1345 ஆம் ஆண்டு இவர் தனது அரசனான சகதை கான் கசனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். அடுத்த வருடமே இவர் மீண்டும் முயற்சித்தார். கானைக் கொல்வதில் வெற்றியும் கண்டார். ஆளும் சக்தியாக இருந்ததை சகதை கான்களின் தொடர்ச்சியை கசனின் மரணமானது முடிவுக்கு கொண்டு வந்தது; கசனுக்குப் பின் வந்த கான்கள் பெயரளவில் மட்டுமே ஆட்சியாளர்களாக இருந்தனர். தனது பதவியை சட்டப்படி செல்லுபடி ஆகக்கூடியதாக வைக்கும் எண்ணத்தில் தனக்கு அமீர் என்ற பட்டத்தை வைத்துக்கொள்வதில் கசகான் நிறைவடைந்து கொண்டார். கான் என்ற பட்டத்தை தான் தேர்ந்தெடுத்த செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களுக்கு சூட்டினார். அத்தகைய வழித்தோன்றல்களானவர்கள் முதலில் தனிசுமென்சி (1346-1348) மற்றும் பிறகு பயன் குலி (1348-1358) ஆகியோராவர்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads