கடற்சிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடற்சிங்கம் (Sea lion) என்பது கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவை இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடற்சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகள் ஆகியன கடற்சிங்கத்தின் முக்கிய இரைகளாகும்.
கடற்சிங்கங்கள் வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு நியூசிலாந்து கடற்கரைகளிலும் காணப்படுகிறது. [1] இவற்றின் வாழ்நாள் 20-30 ஆண்டுகளாகும்.
ஆண் கடற்சிங்கத்தின் அதிகபட்ச எடை 300 கிலோ கிராமும் நீளம் 8 அடியும் ஆகும். பெண் கடற்சிங்கத்தின் அதிக பட்ச எடை 100 கிலோ கிராமும், நீளம் 6 அடியும் ஆகும். ஸ்டெல்லர் வகை கடல் சிங்கத்தின் எடை 1000 கி கி., மற்றும் நீளம் 10 அடியாக உள்ளது. கடற்சிங்கங்கள் ஒரே நேரத்தில் தன் உடல் எடையில் 5-8% (15–35 lb (6.8–15.9 kg)) வரையிலான உணவை உண்ணக்கூடியது.

வெளிப்புற காதுகள் கொண்ட கடற்சிங்கங்களின் குடும்பத்தில் கடல்நாய்கள் மற்றும் நீண்ட தந்தம் போன்ற இரண்டு பற்களைக் கொண்ட பனிக்கடல் யானை ஆகிய இனங்கள் அடங்கியுள்ளது.[2] கடற்சிங்கங்கள் சனவரி முதல் மார்ச் முடிய உள்ள காலத்தில் கடற்கரைகளில் குட்டியிடுகிறது. உலகில் தற்போது 1,65,000 கடற்சிங்கங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.
Remove ads
மனிதனுடனான உறவுகள்

20-ஆம் நூற்றாண்டின் நடுவில் வேட்டைக்காரர்களால் பெருமளவு கடற்சிங்கங்கள் கொல்லப்பட்டன.[3] தற்போது அனைத்து நாடுகளும் கடற்சிங்கங்களை வேட்டையாடுவதை தடை செய்துள்ள போதும், சுற்றுச் சூழல் காரணமாக கடற்சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகில் பல நாடுகளில் கடற்சிங்கங்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்கி, காட்சிக் கூடங்களில் மக்கள் முன்னிலையில் வித்தை காட்டுகிறார்கள். கடலில் நீந்தும் மனிதர்களை கடற்சிங்கங்கள் தாக்குவதில்லை.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் சுற்றுலாத்துறை கடற்சிங்கங்களால் வளர்ந்து வருகிறது.
Remove ads
படக்காட்சியகம்
- கடல் சிங்கங்களின் கூட்டம், வட கலிபோர்னியா
- அமெரிக்க கடற்படை கப்பலில் கடல் சிங்கம்
- மெம்பிஸ் விலங்கு காட்சியகத்தில் கடல் சிங்கம்
- பந்தாய் உணவகத்தில் உறங்கும் கடல் சிங்கம்
- கடல் சிங்கம், மலிபு, கலிபோர்னியா
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேல் வாசிப்பிற்கு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads