கடுந்தொடைக் காவினார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடுந்தொடைப் காவினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 109. பாலைத் திணை. இவர் தன் பாடலால் பெயர் பெற்ற புலவர். காட்டில் கடுந்தொடையால் அம்பு எய்பவரை இவர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாடல் தரும் செய்தி
பாலைத் திணைப் பாடலாகிய இதில் பொருள் தேடத் தலைவன் சென்ற நாட்டில் இருக்கும் கொடுமைகள் அடுக்கிக் காட்டப்படுகின்றன.
- தன் 'நலம் நல்கு ஒருத்தி' தன் மலர்க் கண்களைக் காட்டுவாளாம். இவள் யாழ் போல இனிக்க இனிக்கப் பேசுவாளாம்.
- கொம்பால் உழும் களிறுகள் அங்கு இருக்குமாம்.
- மூங்கில் சோலை வெளிகளில் வெளில்(அணில்) விளையாடுமாம். அணிலை எய்ய விடும் அம்பு ஆள் மேல் பாயுமாம்.
- இப்படிப் பாய்ந்த அம்பால் வீழ்ந்தவர்களை இவர்கள் மேட்டுப் பதுக்கையில் போட்டுவிடுவார்களாம். இப்படிப் போட்ட பதுக்கைகள் எண்ணிலாதவை அங்கு இருக்குமாம்.
- வழி பிரியும் சந்திப்புக் கவலைகளில் இச் செய்தி அறிந்தோர் சொல்லக் கேட்டு யாரும் அந்த வழியில் செல்லமாட்டார்களாம்.
- கையில் பொருள் இல்லையாயினும் அவ் வழியில் செல்வோரைக் கொல்லவேண்டும் என்பது அந் நாட்டு அறன் இல்லா வேந்தன் ஆணையாம்.
இப்படிப்பட்ட வழியில் இவர் பொருள் தேடச் சென்றிருக்கிறாரே!
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads