கடோலினியம்(III) நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடோலினியம்(III) நைட்ரேட்டு (Gadolinium(III) nitrate ) என்பது Gd(NO3)3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள கடோலினியத்தின் கனிம வேதியியல் சேர்மமாகும். அணு உலைகளில் நீரில் கரையும் நியூட்ரான் உறிஞ்சியாகப் பயன்படுத்தப்படுகிறது[1] . மற்ற நைட்ரேட்டுகளைப் போல கடோலினியம்(III) நைட்ரேட்டும் ஒரு ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.
Remove ads
பயன்கள்
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள சவானா ஆற்று தளத்தில் அமைந்துள்ள கனநீர் அணு உலைகளில் கடோலினியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இது கனநீரில் இருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது அல்லது மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது[2][3].
கனடாவில் உள்ள அழுத்த கனநீர் அணு உலையிலும் கடோலினியம்(III) நைட்ரேட்டு நீரில் கரையும் நியூட்ரான் உறிஞ்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மற்ற கடோலினியம் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் தாதுப்பொருளாகவும் கடோலினியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. இவைத் தவிர தனிச்சிறப்பு கண்ணாடிகள் மற்றும் பீங்கான்கள் மற்றும் ஒளிர்பொருளாகவும் உபயோகமாகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads