கட்டற்ற சந்தைமுறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டற்ற சந்தை (Free market) எனும் சந்தைமுறையில், பொருட்கள், சேவைகளின், விலையை தீர்மானிப்பது விற்பவர், வாங்குபவருக்கிடையேயான உடன்பாடு மட்டுமே. அரசுக்கோ, வேறு அதிகாரமையத்திற்கோ விலை தீர்மானிப்பதில் இடம் இல்லை. இச்சந்தை முறையில் கேள்வியும் நிரம்பலும் வெளிக்காரணிகளின் தலையீடு இன்றி அமைகிறது. இச்சந்தைமுறை முதலாளித்துவர்களின் விருப்ப சந்தை முறையாக பொதுவாக அடையாளம் காணப்பட்டாலும், சந்தை அரசின்மைவாதிகள், சந்தைப் பொதுவுடைமைவாதிகள், கூட்டுறவு இயக்கத்தினர், லாபப்பகிர்வை ஆதரிப்போர் போன்றோரும் இதனை உகந்த சந்தைமுறையாக ஏற்றுக்கொள்கின்றனர்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads