கட்டுமான மேலாண்மை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டுமான மேலாண்மை கட்டுமானத் தொழில் துறையின் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சார்ந்த கற்கை மற்றும் செயற்பாடுகளையோ அல்லது கட்டுமான வடிவமைப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கிக் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றுக்கு ஆலோசகராகச் செயற்படும் ஒரு வணிக மாதிரியையோ குறிக்கும்.[1][2][3]
கட்டுமான மேலாளர் ஒருவருடைய மிகவும் பொதுவான 120 பொறுப்புக்கள் 7 பிரிவுகளுள் அடங்குவதாக அமெரிக்கக் கட்டுமான மேலாண்மைக் கழகம் கூறுகிறது. இப்பிரிவுகள், திட்ட மேலாண்மைத் திட்டம், செலவு மேலாண்மை, நேர மேலாண்மை, தர மேலாண்மை, ஒப்பந்த நிர்வாகம், பாதுகாப்பு மேலாண்மை என்பனவாகும். கட்டுமான மேலாளரின் தொழில் செயற்பாடுகள், திட்ட மேலாண்மைக் குழுவின் பொறுப்புக்கள் மற்றும் மேலாண்மைக் கட்டமைப்பை வரையறுத்தல், திட்டக் கட்டுப்பாடுகளை அமுல் படுத்துவது மூலம் ஒழுங்குபடுத்துதல் மற்றும் முன்னெடுத்துச் செல்லுதல், பொறுப்புக்கள் மற்றும் பங்களிப்புக்களையும் தொடர்பு வழிமுறைகளையும் வரையறுத்தல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் முரண்பாடுகள், மேலதிகச் செலவு கோரல் என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய கூறுகளை அடையாளம் காணுதல் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads