முகவீணை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி ஆகும். நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது [1] இந்தக் கருவி ஒன்றரை அடி உயரம் கொண்டது. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம்.[2]தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது.
கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆச்சா மரத்தினால் செய்யப்படும் இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு அல்லது எட்டு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. ஒரு காலத்தில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் இசைக்கப்பட்டுவந்த இது தற்போது திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.
தற்பொழுது திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் மட்டுமே முகவீணை வாசிக்கும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும் வைணவக் கோயில்களில் அர்த்த ஜாம்ப் பூசையின்போது இதை வாசிக்கும் பழக்கம் உள்ளது. தவிலுடன் கூடிய நாகசுரத்தை பெரிய மேளம் என்றும், தவில் இல்லாம இந்தக் கருவியை சின்ன மேளம் என்றும் அழைக்கிறார்கள்.[3]
கோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads