கணிப்பியப் பாய்ம இயக்கவியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணிப்பியப் பாய்ம இயக்கவியல் (Computational fluid dynamics-CFD) என்பது படிமுறைத் தீர்வு மற்றும் எண்சார் பகுப்பியல் வழிமுறைகள் மூலம் பாய்ம ஓட்டங்களை ஆராயும் பாய்ம இயக்கவியல் பிரிவாகும். குறிப்பிட்ட எல்லை நிபந்தனைகள் கொண்ட திடப் பரப்புகளோடு வாயுக்கள் மற்றும் நீர்மங்களின் இடைவினைகளை உருவகப்படுத்தவும் கணக்கீடுகள் செய்யவும் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிவேக மீத்திறன் கணினிகள் கொண்டு மிகத் துல்லியமான தீர்வுகளைப் பெறலாம். ஒத்தயொலி வேக மற்றும் கொந்தளிப்புப் பாய்வுகள் போன்ற மிகக் கடினமான பாய்வுப் புலங்களை உருவகப்படுத்தவும் துல்லியமான தீர்வுகள் பெறவதற்குமான மென்பொருட்களை உருவாக்க பெருமளவு ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றால் பெறப்படும் தீர்வுகளை நிச்சயப்படுத்த முதலில் காற்றுச்சுரங்க ஆய்வுகள் செய்யப்படுகின்றன, முழுத் தீர்வையும் மொத்தமாகச் சோதிக்க முழு அளவு மாதிரி சோதனைகள் செய்யப்படுகின்றன, எ-கா: வானூர்தியின் பறத்தல் சோதனை.[1][2][3]


Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads