கணேஷ் வெங்கட்ராமன்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

கணேஷ் வெங்கட்ராமன்
Remove ads

கணேஷ் வெங்கட்ராமன் இவர் ஒரு மாடல் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன்' போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் கமலஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால், போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கும் நிஷா கிருஷ்ணன் என்ற நடிகையுடன் 22 நவம்பர் 2015 அன்று திருமணம் நடைபெற்றது.[1][2][3]

விரைவான உண்மைகள் கணேஷ் வெங்கட்ராமன், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

கணேஷ் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவரின் அப்பா அம்மா தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். இவர் 2003ம் ஆண்டு நடந்த "மிஸ்டர் இந்தியா 2003" வெற்றியாளர் ஆவார். அதே ஆண்டில் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற சூப்பர் மாடல் போட்டியில் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார்.

இவருடைய கல்லூரி நாட்களில், இவருக்கு வடிவழகு மற்றும் நடிப்பு நோக்கி கவனம் இருந்தது. தனது கல்லூரியில் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார். முறையான கல்வியை முடித்த பின்னர், மென்பொருள் வல்லுநராக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இவர் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்தார். இயக்குநர் முருகதாஸ் ஒரு விளம்பரத்துக்காக கணேஷ் வெங்கட்ராமனை தேர்வு செய்தார்.

Remove ads

மாடல்

இவர் இதுவரைக்கும் 200 விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை

இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயாவி 3டி தொடர் முலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். உலகில் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட 3டி தொடர் இதுவாகும்.

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads