கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு என்பது செனிவாவைத் தலைமை அலுவலகமாக் கொண்டியங்கும் சுவிசு நாட்டு அரசு அல்லாத ஓர் அமைப்பாகும். இது பவுண்டேசன் சுவிசே டீமைனேச் எனும் பிரான்சிய மொழிப் பெயரினாலேயே சுருக்கமாக எப் எசு டி (FSD) என்றவாறு அழைக்கப் படுகின்றது.
பணிகள்
மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை அகற்றி மக்களை மீண்டும் மீள் குடியேற்றத்திற்கு உதவுவதே இந்த அமைப்பின் பணியாகும். இதன் முதன்மையான பணிகளாவன:
- மாந்தரநல நோக்குடன் கண்ணிவெடியகற்றல்.
- கண்ணிவெடி அகற்றுபவர்களுக்குப் பயிற்சியளித்தல்.
- கண்ணிவெடி தீநேர்ச்சிகளைத் (விபத்துக்களைத்) தவிர்க்கும் வண்ணம் பாதுகாப்புப் பயிற்சிகளையும் மற்றும் மிதிவெடி தீவாய்ப்புக் கல்வியையும் வழங்குதல்.
- சேமிக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை அழித்தல்.
Remove ads
அமைப்பு
கண்டிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பானது 2005 ஆம் ஆண்டுப் படி செனிவாத் தலைமை அலுவலத்தில் 10 பணியாளர்களையும் பணிபுரியும் இடங்களில் 60 பன்னாட்டு மற்றும் 600 உள்நாட்டுப் பணியாளர்களையும் கொண்டுள்ளது. ஆண்டிற்கான தோராயச் செலவீனம் ஏறத்தாழ 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது பொது மற்றும் தனியார் துறைகளூடாகவும் உலக உணவுத் திட்டம், திட்டச் சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் கண்ணிவெடித் திட்ட சேவை, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஐரோப்பாவின் கூட்டுறவிற்கும் பாதுகாப்பிற்குமான அமைப்பு, அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றினூடகவும் உதவிகளைப் பெறுகின்றது.
Remove ads
உலகளாவிய திட்டங்கள்
2009 ஆம் ஆண்டின் படி இலங்கை, தச்செக்கித்தான், லாவோசு, சூடான், புரூண்டி ஆகிய நாடுகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. இதற்கு முன்னர் பாசினியா, குரோவேசியா, அல்பேனியா, ஆப்கானித்தான், ஈராக் மற்றும் பாக்கிசுத்தான் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
வெளியிணைப்புகள்
- கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு (ஆங்கில மொழியில்)
- மிதிவெடிகளை மனிதவலுக்கொண்டு அகற்றல் முப்பரிமாணக் காட்சி.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads