கதிரடிக்கும் களம்
தானியக் கதிரடிக்கும் களம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதிரடிக்கும் களம் (Threshing floor) என்பது வைக்கோலில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்கும் களமாகும். தானியக் கதிர்களை கதிரடித்தல் என்பது பாரம்பரி முறையில் நெற்கட்டுகளைப் பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்கப்படும். அதன் மீது 2 அல்லது 3 ஜோடி எருதுகளைக் கொண்டு மிதிப்பர். இதன் மூலம் 95 சதவீத நெல் மணிகள் உதிர்ந்துவிடும். மீதம் உள்ளவை மனித சக்தி மூலம் பிரித்தெடுக்கப்படும். பொதுவாக தமிழ்நாட்டில் கதிரடிக்கும் களங்கள் திறந்த வெளியிலேயே இருக்கும். அவை இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று சமதளமான பாறை ஆகும். அடுத்து களத்திற்காக தூய்மையாக்கபட்ட மண் தரை களம் ஆகும் இதில் அறுவடையான கதிர்களை விவசாயி கொண்டுவந்து கதிரடித்து தானியங்களை பிரித்து சேகரிப்பர். பின்னர் அவற்றைத் தூற்றி பதர் தூசி உள்ளிட்ட தேவையாற்ற பொருட்களை நீக்குவர். நிறந்தவெளி கதிரடிக்கும் களமானது முழு கிராமத்திற்கும் அல்லது ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கும். மேலும் கதிரடிக்கும் களம் பொதுவாக கிராமத்திற்கு வெளியே காற்று வீசும் இடத்தில் அமைந்திருக்கும்.


Remove ads
கதிரடிக்கும் களங்களின் அமைப்பு
கதிரடிக்கும் களங்கள் பொதுவாக பண்ணைக்கு அருகில் அல்லது அறுவடைப் பகுதிகளிலிருந்து எளிதில் செல்லக்கூடிய இடங்களில் அமைந்திருக்கும். அவை பொதுவாக தட்டையான மேற்பரப்புக் கொண்ட பாறை கொண்ட பகுதியில் அமைந்திருக்கும். பாறை வசதி இல்லாத பகுதியில் மழை நீர்தேங்காத உயரமான ஒரு இடத்தில் உள்ள மண் தரையை சமதளமாக்கி அதைக் கெட்டிப்படுத்தி, அதன் மீது மாட்டுச் சாணத்தைப் பூசி களத்தைத் தயார்படுத்துவர். சில பகுதிகளில் தார்சாலையையை களமாக பயன்படுத்தும் போக்கும் உள்ளது.[1] தற்காலத்தில் அரசே ஊரில் ஒரு பொதுவான இடத்தில் கற்கரையைக் கொண்டு கதிரடிக்கும் களத்தை அமைத்து தருகிறது. மழைக்குப் பிறகு தண்ணீர் நிற்பதைத் தவிர்ப்பதற்காக, களங்கள் பொதுவாக லேசாக சாய்வு தன்மைக் கொண்டவையாக உருவாக்கபபடும்.
கதிரடிக்கும் களங்கள் பெரும்பாலும் ஒரு தடிமனான திட்டால் சூழப்பட்டிருக்கும். கதிரடித்தல் முடிந்ததும், தானியத்தைத் தூற்றி தானியத்தை தூய்மைப் படுத்தி பிரித்தெடுக்கும் பணிக்கு ஏற்றதாக காற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, கள்ளமானது பெரும்பாலும் உயரமான இடத்தில் அமைக்கப்படும்.
Remove ads
பயன்படுத்துதல்
தானியக் கதிர்க்கட்டுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, வைக்கோல் களம் முழுவதும் பரப்பப்படும். பரப்பப் பட்டவை நெற்பயிர் என்றால் அதன்மீது சோடி எருதுகளைக் கொண்டு நன்கு நடக்கவைத்து நெல்மணிகளை உதிரவைப்பர். அதுவே கேழ்வரகு உள்ளிட்ட கதிர்கள் என்றால் எருதுகளின் பின்னால் கல்லால் செய்யபட்ட இராகிக் குண்டைக் கட்டி அதை வைக்கோல் பரப்பின் மீது இழுத்து உருளவைப்பர். இதனால் வைகோலில் இருந்து தானியம் உதிரும்.
இவ்வாறான கதிரடிப்புக்குப் பிறகு, தானியங்களை முறத்தைக் கொண்டு காற்றில் தூற்றுவர். இதனால் பதர் உள்ளிட்டவை காற்றினால் அடித்துச் செல்லப்படும்; அதே நேரத்தில் கனமான தானியம் தூற்றுபவரின் காலடியில் விழும். பின்னர் தானியத்தை சல்லடை மூலம் மேலும் சுத்தம் செய்வர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads