கதிரியக்கத் தொடர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அணுக்கருவியலில், கதிரியக்கத் தொடர் (radioactive series அல்லது decay chain) என்பது கதிரியக்கம் காரணமாகப் புதிதாகத் தோன்றும் சேய்த் தனிமமும் நிலையற்றதாக இருக்குமாயின் அதுவும் கதிரியக்கச் சிதைவிற்கு உள்ளாகித் தொடர் தேய்விற்கு உள்ளாகும் நிகழ்வு ஆகும். இவ்வாறே நிலையான தனிமம் தோற்றுவிக்கப்படும் வரை கதிரியக்கம் தொடரும். இந்நிகழ்வில் தோன்றும் ஓரிடத்தான்கள் (ஐசோடோப்பு) அனைத்தும் ஒரு கதிரியக்கத் தொடர் அல்லது ஒரு கதிரியக்கக் குடும்பம் எனப்படுகிறது.

ஒரு தாய் ஓரிடத்தான் தேய்ந்து சேய் ஓரிடத்தான் ஆகின்றது. இந்த சேய் ஒரு நிலையான தனிமமாகவும் இருக்கலாம், அல்லது இது மேலும் தேய்ந்து அதனது சேய் ஓரிடத்தானாக மாறவும் முடியும். ஒரு சேய் ஓரிடத்தானில் இருந்து உருவாகும் ஓரிடத்தான் பெயர்த்தி ஓரிடத்தான்" (granddaughter isotope) என அழைக்கப்படுகிறது..

கதிரியக்கத் தோரியத் தொடரில் 90 தோரியம் 232 இல் (232Th) தொடங்கி, காரீய ஐசோடோப்பான காரியம் 208 (208Pb.) உடன் முடிவடைகிறது. இதுபோல் யுரேனியத் தொடரும் ஆக்டினியத் தொடரும் நெப்டூனியம் தொடரும் உள்ளது.

யுரேனியம் 238 கதிரிக்கத் தொடர்-

யுரேனியம் || U || 92 || 234 ||α || 3.32 செ.மீ || 3*10^5 வரு

மேலதிகத் தகவல்கள் தனிமம், குறியீடு ...

இது போல் தோரியம் தொடரை அடியில் காட்டி இருப்பது போல் குறிக்கலாம் 90 தோ232.[1][2][3]

மேலும் கதிரியக்க அக்டீனியத் தொடரும் உள்ளது 92 அக் 235 .உள்ளது

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads