கதைக்குள் கதை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதைக்குள் கதை என்பது கதை ஒன்றின் போக்கின் போது இன்னொரு கதையைப் புகுத்தும் ஒரு முறையாகும். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கவிதைகள் போன்றவற்றில் இந்த உத்தி பயன்படுகின்றது.
நோக்கம்
துணைக் கதைகள், வெறுமனே களிப்பூட்டுவதற்காகவோ அல்லது கதையின் நிகழ்வுகளுக்குத் தேவையான எடுத்துக்காட்டுகளைத் தருவதற்காகவோ பயன்படுகின்றன. மேற்கூறிய இரண்டு வழிகளிலும், துணைக்கதைகள், முதன்மைக் கதையில் வருகின்ற கதைமாந்தர்களைப் பொறுத்தவரை குறியீட்டு, உளவியல் முக்கியத்துவம் கொண்டவயாக அமைகின்றன. பெரும்பாலும் இரண்டு கதைகளுக்கும் இடையே ஒரு இணையான போக்குக் காணப்படும். துணைக் கதையில் வெளிப்படும் பொருள், முதன்மைக் கதையில் மறைபொருளாக உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.
Remove ads
பழைய இலக்கியங்களில்
பழங்கால இந்தியாவின் இதிகாசங்களிலும், வேறுபல இலக்கிய வடிவங்களிலும் கதைக்குள் கதை சொல்லும் உத்தி தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களையும், பஞ்சதந்திரத்தையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆயிரத்தொரு இரவுகள் என்னும் நூலிலும் இந்த உத்தி கையாளப்பட்டு உள்ளது.
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads