கத்திப்பாரா சந்திப்பு
சென்னையிலுள்ள சில சாலைகளின் சந்திப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
13.00727°N 80.20371°E கத்திப்பாரா சந்திப்பு, சென்னை மாநகராட்சியின் ஒரு முக்கிய சாலைச் சந்திப்பு ஆகும்.[1]
Remove ads
அமைவிடம்
இது ஆலந்தூரில், கிண்டிக்கு தெற்கே அமைந்திருக்கிறது. இது ஜி.எஸ்.டி சாலை (தேசிய நெடுஞ்சாலை 45), உள் வட்ட சாலை, அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இடைவெட்டுச் சந்திகளை இணைக்கிறது.
குறிப்பு
கத்திப்பாரா சந்திப்பு, ஒரு மிகப் பெரிய இரட்டை அடுக்கு பல்தளச்சாலை மற்றும் இடைமாற்றுச்சந்தி ஆகும். இந்த சுற்றுச்சந்தியில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சிலை அமைந்திருக்கின்றது.
திறப்பு
ஜி.எஸ்.டி சாலையையும் (NH 45), உள் வட்ட சாலையையும் இணைக்கும் முக்கிய வழி, 9 ஏப்ரல் 2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. இது முழுமையாக கட்டப்பட்டு, 26 அக்டோபர் 2008 இல் தீபாவளி பரிசாக சென்னை மக்களுக்கு, அன்றைய முதலமைச்சரால் மு. கருணாநிதியால் இந்திய சீர் நேரம் காலை 9:00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads