கந்தக டிரையாக்சைடு பிரிடின் அணைவு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தக டிரையாக்சைடு பிரிடின் அணைவு (Sulfur trioxide pyridine complex) என்பது C5H5NSO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும். நிறமற்ற இத்திண்மம் முனைவுக் கரிம கரைப்பான்களில் கரைகிறது. இலூயிக் காரம் பிரிடினும் இலூயிக் அமிலம் கந்தக டிரையாக்சைடும் சேர்ந்து ஒரு கூட்டு விளைபொருளாக இது உருவாகிறது. உதாரணத்திற்கு சல்பேட்டு எசுத்தர்கள் ஆல்ககால்களில் இருந்து தயாரிக்கப்படுதலைக் கூறலாம்:[1]
- ROH + C5H5NSO3 → [C5H5NH]+[ROSO3]−</sup.
சல்போனைலேற்ற வினைகளுக்கு இச்சேர்மம் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பியூரான்களை[2] சல்போனைலேற்றம் செய்யும் வினைகளில் இது மிகவும் பயன்படுகிறது. பாரிக்-தோயரிங்கு ஆக்சிசனேற்ற வினையில் இதுவோர் செயலூக்கமிக்க எலக்ட்ரான் கவரியாகச் செயல்படுகிறது [3].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads