கந்தணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தணி (Baluster) என்பது, படிக்கட்டுகள், மாடங்கள் (balcony), மேல் முற்றங்கள் (terrace) போன்றவற்றின் விளிம்புகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் ஒரு குட்டையான தடுப்பைக் குறிக்கும். இச்சொல் கந்து + அணி என இரு சொற்கள் இணைந்து அமைந்தது. இங்கே கந்து என்பது குட்டையான ஒரு கம்பம் அல்லது தூணைக் குறிக்க, அணி வரிசையாக அமைந்தது எனப் பொருள் படுகிறது. எனவே கந்தணி குட்டைத் தூண்களின் வரிசை எனப்பொருள்படும். இச்சொல் "balustrade" என்னும் ஆங்கிலச் சொல்லின் சொல்வரலாற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்ச்சொல் ஆகும்.

கந்தணி என்பது வரிசையாக அமைந்த கந்து எனப்படும் குட்டைத் தூண்களையும் அவற்றின் மீது தாங்கப்படுகின்ற சட்டம் ஒன்றையும் ஒருங்கே குறிக்கப் பயன்படுகிறது. இது, மரம், காங்கிறீற்று, உலோகம், பிளாஸ்டிக்கு போன்ற பல வகைப் பொருட்களால் உருவாக்கப்படுகின்றது.[1]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads