கந்தர்வர்

From Wikipedia, the free encyclopedia

கந்தர்வர்
Remove ads

கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு கணங்களில் ஒரு இனக்குழுவாவர்.

Thumb
கந்தர்வர்வனுடன் ஒரு அரம்பை, 10ஆம் நூற்றாண்டு சிற்பம், வியட்நாம்

இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள்.

இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள்.[1] இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும்.[2] அரம்பையர்கள், கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர்.

தேவலோகத்தில் கச்யபப் பிரஜாபதி அரிஷ்டா தம்பதிகளுக்கு பிறந்தவர்களே கந்தர்வர்கள்.[3] கந்தவர்கள் பிரம்மனின் மூக்கில் இருந்து தோன்றியவர்கள் என்ற கருத்தும் உள்ளது. இவன் பிரம்மாவையும், சந்திரனையும் வழிபடுகின்றனர்.[3]

கந்தவர்களுக்கு பறக்கும் திறன் உள்ளது.[3]

தேவர்களுக்காக சோமரசம் எனும் மதுபானம் தயாரிப்பவர்களாகவும், கானம் இசைத்து தேவர்களை மகிழ்விப்பவர்களாகவும் கந்தர்வர்கள் உள்ளனர்.[3]

அதர்வண வேதத்தின்படி 6,300 கந்தர்வர்கள் இருக்கிறார்கள். கந்தவர்களின் தலைவனாக சித்ராதா என்பவர் உள்ளார். பாதாள லோகத்தின் வாசிகளான நாகர்கள் என்னும் அசுரர்கள் கந்தவர்களின் எதிரிகள் ஆவார்கள்.

Remove ads

சிவபெருமான் காதுகளில் கந்தர்வர்கள்

அஸ்வதரன், கம்பதரன் என்ற இரண்டு கந்தர்வர்கள் மிக அழகாகப் பாடுவர். அவர்களின் பாடல்களை எந்நேரமும் கேட்க சிவபெருமான் இருவரையும் குண்டலங்களாக தனது காதில் அணிந்து கொண்டார் என்பது சைவ சமயத்தில் கூறப்படக்கூடிய தொன்மக்கதையாகும். [4]

காண்க

ஆதாரம்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads